பிப்ரவரி மாத இறுதியிலேயே வங்கி சேவை சீரடையும் என பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யார் கூறியிருப்பதால் பணத் தட்டுப்பாடு மேலும் 50 நாட்களுக்கு நீடிக்கும் என்பது உறுதியாகியுள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் வங்கிகளில் இருப்பு தொகை அதிகரித்து இருப்பதாக கூறியுள்ளார். இதனால் கடனுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டது போல், வைப்பு தொகைக்கான வட்டி விகிதம் மாற்றி அமைக்கப்படும் என்று அருந்ததி பட்டாச்சார்யார் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி இறுதியில் வங்கிகள் இயல்பு நிலைக்கு திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதி அறிவிக்கப்பட்டதால் ஏற்பட்ட பணத் தட்டுப்பாடு டிசம்பர் இறுதிக்குள் சீராகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆனால் அவருக்குரிய 50 நாள் கெடு முடிந்தும் பணத் தட்டுப்பாடு நீடிக்கிறது. இந்நிலையில் பிப்ரவரி மாத இறுதியிலேயே வங்கி சேவை சீரடையும் என நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி தலைவரே கூறியிருப்பதால் மேலும் 50 நாட்களுக்கு பணப் பிரச்சனை நீடிக்கும் என்பது தெளிவாகியுள்ளது.
No comments:
Post a Comment