பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது.
ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் பணமில்லா பரிவர்த்தனை பொருளாதாரமும் ஒன்று என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஆன்-லைன் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து பணம் செலுத்தினால் 5 ரூபாய் சலுகை வழங்கப்படும் என்று எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
நெட் பேங்கிங், கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம்.
டிஜிட்டல் பணவர்த்தனையை ஊக்குவிக்கும் வகையில் மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு மானியத்தின் கீழ் ஆண்டுதோறும் ஒரு குடும்பத்திற்கு 12 எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படுகிறது. அதற்குமேல் தேவைப்படுபவர்கள் மானியம் இல்லாமல் வெளிச் சந்தை விலையில் வாங்கிக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment