7 வது ஊதியக்குழு அமுல்படுத்திடவும்,புதிய ஓய்வூதியதிட்டத்தை நீக்க கோரி ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றுகை !!
மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழு பரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத் தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அறிவிக்கும்.

அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளை போக்க குழு அமைத்து ஆய்வு செய்யும். ஆனால் இந்த முறை ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத் தாமல், தமிழக அரசு குழு அமைத் துள்ளது. அந்த குழு செயல் படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிட திட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம் என்றார்
No comments:
Post a Comment