வங்கி ஊழியர்கள் பிப்.7ல் ஸ்டிரைக் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 21, 2017

வங்கி ஊழியர்கள் பிப்.7ல் ஸ்டிரைக்

புதுடில்லி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம் ஏழாம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்தப் போவதாக, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

டில்லியில், சங்கத்தின் செயலர், வெங்கடாசலம் கூறியதாவது: மத்திய அரசின் செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு வெளியாகி, 70 நாட்களுக்கு மேலாகி விட்டது. ஆனால், நிலைமை இன்னும் முழுமையாக சீராகவில்லை. வாரம், 24 ஆயிரம் ரூபாய் வழங்க, பல வங்கிகளால் முடியவில்லை. அதனால், பணம் வழங்குவதற்கான கட்டுப்பாட்டை நீக்கி, வங்கிகளுக்கு தேவையான பணத்தை வழங்க, ரிசர்வ் வங்கியும், மத்திய அரசும், நடவடிக்கை எடுக்க வேண்டும்.ரிசர்வ் வங்கியின் பண நிர்வாகத்தில், அரசு தலையிடக் கூடாது. அதன், தன்னாட்சி உரிமை காப்பாற்றப்பட வேண்டும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், உயிரிழந்த மக்கள் மற்றும் வங்கி ஊழியர்களின் குடும்பத்துக்கு, இழப்பீடு வழங்க வேண்டும். மத்திய அரசின் அறிவிப்பால், விடுமுறையின்றி, கூடுதல் நேரம் பணிபுரிந்த ஊழியர்களுக்கு, சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, அடுத்த மாதம், ௭ம் தேதி, நாடு தழுவிய அளவில், ஒருநாள் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு, அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உட்பட பல சங்கங்கள், ஆதரவு தெரிவித்துள்ளன. இவ்வாறு வெங்கடாசலம் கூறினார்.

No comments:

Post a Comment