ஓட்டுநர் உரிமக் கட்டணம் இன்றுமுதல் உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 8, 2017

ஓட்டுநர் உரிமக் கட்டணம் இன்றுமுதல் உயர்வு

ஓட்டுநர் உரிமக் கட்டணம் இன்றுமுதல் உயர்வு
          தமிழகம் உள்பட நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் உரிமம், உரிமத்தை புதுப்பித்தல் ஆகியவற்றுக்கான கட்டணங்களை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

தமிழகத்தில் இன்று முதல் அமல்: இந்தக் கட்டணங்களை கடந்த டிசம்பர் 29 -ஆம் தேதி முன் தேதியிட்டு மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் கட்டண உயர்வு சனிக்கிழமை (ஜன.7) முதல் அமலுக்கு வருகிறது. சில தினங்களுக்கு முன்பு (அதாவது டிசம்பர் 29-ஆம் தேதி முதல்) வழங்கப்பட்ட ஓட்டுநர் உரிமங்களுக்கு நிலுவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று தமிழக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். 
புதிய கட்டண விவரம் (பழைய கட்டணம் அடைப்புக்குறிக்குள்...): எல்எல்ஆர் (வாகனம் கற்றுக் கொள்ளும் காலம்) உரிமம் -ரூ.150 (ரூ.30); இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் -ரூ.500 (ரூ.350); இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் புதுப்பித்தல் -ரூ.200 (ரூ.50); தேசிய வாகன ஓட்டுநர் உரிமம் -ரூ.1,000 (ரூ.500); மாற்று ஓட்டுநர் உரிமம் -ரூ.5,000 (ரூ.2,500); ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனப் பதிவு -ரூ.1,000 (ரூ.300); ஓட்டுநர் பயிற்சி மையங்கள் பதிவுக் கட்டணம் -ரூ.10,000 (ரூ.2,500).தமிழகத்தில் உள்ள 99 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இந்தக் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment