நாக்’ தர மதிப்பீடு கட்டாயம் : யு.ஜி.சி., தலைவர் கண்டிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 1, 2017

நாக்’ தர மதிப்பீடு கட்டாயம் : யு.ஜி.சி., தலைவர் கண்டிப்பு

நாக்’ தர மதிப்பீடு கட்டாயம் : யு.ஜி.சி., தலைவர் கண்டிப்பு

சென்னை: ’அனைத்து கல்லுாரிகளும், மத்திய அரசின், ’நாக்’ தர மதிப்பீடு பெறுவது
கட்டாயம்’ என, பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி., தெரிவித்துள்ளது.
’நாக்’ தர மதிப்பீடு பெறுவதற்கான, புதிய விதிமுறைகள் குறித்து, சென்னை பல்கலை துணைவேந்தர் துரைசாமி தலைமையில், நேற்று கருத்தரங்கம் நடந்தது. 

இதில், யு.ஜி.சி., தலைவர், வீரேந்தர் எஸ்.சவுகான் பேசியதாவது:

நம்நாட்டில், 1947ல், 20 பல்கலைகளும், 400 கல்லுாரிகளும் இருந்தன. தற்போது, 800 பல்கலைகளும், 40 ஆயிரம் கல்லுாரிகளும் உள்ளன. கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக, உள்கட்டமைப்பு வசதி, தகுதியான ஆசிரியர்கள் நியமனம் போன்றவற்றில், கவனம் செலுத்த வேண்டியுள்ளது. 

இதற்காக, ’நாக்’ தர மதிப்பீடு முறை பின்பற்றப்படுகிறது.
எனவே, இந்த தர மதிப்பீட்டை, அனைத்து கல்லுாரிகளும் பெற வேண்டியது கட்டாயம். இதற்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஆகஸ்ட் வரை அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது. 

ஒவ்வொரு கல்லுாரியும், மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்தும் வகையில், உள்கட்டமைப்பை மேம்படுத்துவதுடன், புதிய கண்டுபிடிப்பு மற்றும் ஆராய்ச்சியை அதிகரிக்கும் வகையில் கற்பிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், பல்வேறு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளின் பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment