சிறார்களுக்கான வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 1, 2017

சிறார்களுக்கான வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

சிறார்களுக்கான வீர தீர செயல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
ஏரி, குளங்களில் மூழ்கியவரைக் காப்பாற்றுதல் போன்ற தேசிய அளவிலான வீர தீர செயல் புரிந்த சிறார்களுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தேசிய அளவிலான வீர தீர செயல் புரிந்த சிறார்களுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தில் நீரில் மூழ்கியவரைக் காப்பாற்றுவது, ஏரி மற்றும் குளங்களில் இருந்து மீட்பது போன்ற வீர தீர செயல் புரிந்த சிறார்களின் சாதனைகளை விவரமாகவும், தெளிவாகவும் அளிக்க வேண்டும். விண்ணப்பம் செய்பவரைப் பற்றிய விவரங்கள் 250 வார்த்தைக்கு மிகாமல் ஆங்கிலம் அல்லது தமிழில் இருக்க வேண்டும்.
கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரையிலான காலத்தில் சாதனை நிகழ்த்தப்பட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் 6 வயதிற்கு மேலும் 18 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும். இரு நபர்களின் பரிந்துரைக் கடிதத்துடன் விண்ணப்பிக்க வேண்டும். ஆகஸ்ட் 4-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
பள்ளி முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர், குழந்தைகள் நல குழு பொதுச் செயலாளர், மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர் அல்லது காவல் உயர் அதிகாரி ஆகியோர் தேர்வு செய்பவர்களாக இருப்பர். கூடுதல் விவரங்களுக்கு சென்னை ராஜாஜி சாலை (கடற்கரை சாலை) சிங்காரவேலர் மாளிகை (மாவட்ட ஆட்சியர் அலுவலகம்) 8-வது தளத்தில் உள்ள மாவட்ட சமூகநல அலுவலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment