கண்ணியமாக உடை அணியுங்கள் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு - கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 9, 2017

கண்ணியமாக உடை அணியுங்கள் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு - கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை

தமிழகத்தில் கலை கல்லூரிகள், பி.எட். கல்லூரிகள், உடற்பயிற்சி கல்லூரிகள் உள்பட மொத்தம் 1,480 கல்லூரிகள் உள்ளன. கலை
மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முடிவடைந்து தற்போது வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இந்த கல்லூரிகளுக்கு, கல்லூரி கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.இது குறித்து கல்லூரி கல்வி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு புதிதாக கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் அறிவுரை கூற வேண்டும் என்று கல்லூரி கல்வி இயக்குனரகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பி உள்ளோம்.
அதன்படி, ஒவ்வொரு கல்லூரியிலும் முதல்வர்கள், புதிதாக சேர்ந்துள்ள மாணவ-மாணவிகளுக்கு தேவையான அறிவுரைகளை கூறியிருப்பார்கள். மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு கண்ணியமான முறையில் உடை அணிந்து வரவேண்டும். கல்லூரிகளில் இந்த ஆடை கட்டுப்பாடு ஏற்கனவே அமலில் உள்ளது.கல்லூரிக்கு மாணவ-மாணவிகள் சரியான நேரத்தில் வரவேண்டும். தேவையான மற்றும் தவிர்க்க முடியாத விடுமுறையை தவிர மற்ற விடுமுறைகளை எடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment