அரசு கேபிள், 'செட் - டாப் பாக்ஸ்' வாங்க 4.5 லட்சம் பேர் ஆர்வம் -டிஜிட்டல் ஒளிபரப்பு விரைவில் துவங்கப்படும்'
தமிழக அரசு கேபிள், 'டிவி' வழங்கும், 'செட் - டாப் பாக்ஸ்'களை வாங்க, 4.5 லட்சம் பேர் ஆர்வமுடன் விண்ணப்பித்துள்ளனர்.
அரசு கேபிள், 'டிவி' நிறுவனம், 'அனலாக்' என்ற, ஒயர் மூலமான, கேபிள் சேவையை வழங்கி வருகிறது
இதை துல்லிய முறையில் வழங்க, 'டிஜிட்டல்' தொழில் நுட்ப ஒளி
பரப்பை துவங்கவுள்ளது. அதற்காக, 'செட் - டாப் பாக்ஸ்'கள், ஆப்பரேட்டர்கள் வழியாக, வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கப்பட உள்ளன. இதுவரை, 'செட் - டாப் பாக்ஸ்' கோரி, 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது குறித்து, அரசு கேபிள், 'டிவி' அதிகாரிகள் கூறுகையில், 'தனியார் கேபிள், 'டிவி' நிறுவனங்கள் விமர்சித்து வந்தாலும், அரசு கேபிள், 'டிவி'க்கான ஆதரவு அதிகமாக உள்ளது. 'செட் - டாப் பாக்ஸ்' கோரி, 4.5 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதில் இருந்தே, இது உறுதியாகிறது. ஆப்பரேட்டர்
களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு, டிஜிட்டல் ஒளிபரப்பு விரைவில் துவங்கப்படும்' என்றனர்.
No comments:
Post a Comment