ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, July 25, 2021

ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.


 ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
முன்னதாக கரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக, சிஐஎஸ்சிஇ எனப்படும் இந்தியப் பள்ளிச் சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் நடத்தும் ஐசிஎஸ்இ, ஐஎஸ்சி 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன.
இந்நிலையில், ஐசிஎஸ்இ 10 மற்றும் ஐஎஸ்இ 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மாணவர்கள், cisce.org or results.cisce.org. என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளைத் தெரிந்து கொள்ளலாம்.
இந்தத் தேர்வு முடிவுகள், வாரியம் நிர்ணயித்த மதிபெண் கணக்கீட்டின்படி வெளியாகியுள்ளது.
ஐஎஸ்சிஇ தலைமை நிர்வாக அதிகாரி ஜெர்ரி அரதூண் கூறுகையில், "இந்த ஆண்டு இதற்கு முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்டதுபோல் ஐசிஎஸ்இ, ஐஎஸ்இ வாரியத்தில் படித்த மாணவர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்படமாட்டாது.
ஏனெனில் இந்த ஆண்டு மாணவர்களுக்கு மதிப்பெண் அலகுத் தேர்வு, பருவத் தேர்வு உள்ளிட்டத் தேர்வுகளின் அடிப்படையில் கணிக்கடப்பட்டு வழங்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மதிப்பெண் தொடர்பாக ஏதேனும் சர்ச்சை இருந்தால் அதைக் களையும் வகையில் வழிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி ஒருவேளை ஏதேனும் ஒரு மாணவருக்கு தனக்கு வழங்கப்பட்டுள்ள மதிப்பெண் மீது அதிருப்தி இருந்தால் பள்ளிக்கு விரிவான ஆட்சேபனைக் கடிதம் ஒன்றை காரணங்களைக் குறிப்பிட்டு அளிக்க வேண்டும். இது பள்ளித் தலைமையால் பரிசீலிக்கப்படும்.
ஆனால், கூட்டல் பிரச்சினைகளுக்கு மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்" என்று கூறியுள்ளார்.

No comments:

Post a Comment