சமூக ஊடகங்களில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீண்வதந்திகள் பரப்பும் முயற்சிகளை கைவிட வேண்டும் :தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் பேட்டி.
சமூக ஊடகங்களில் தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் வீண்வதந்திகள் பரப்பும் முயற்சிகளை கைவிட வேண்டும்.
இது குறித்து தமிழக தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்ற மாநில பொதுச் செயலாளர் மன்றம் நா.சண்முகநாதன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது:என் உயிரினும் மேலான ஆசிரியர் மன்ற உறவுகளே அன்பான வணக்கம்... தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் வாழ்த்துக்களோடு ஆசிரியர் இன காவலர் ஐயா பாவலர் அவர்களால் உருவாக்கப்பட்ட கடமையைச் செய் உரிமையை கேள் என்ற உயர்ந்த நோக்கோடு செயல்பட்டு கொண்டிருக்கக்கூடிய தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் ஆசிரியர்களின் உரிமைகளை போராடி வாதாடி நாம் பெற்றிருக்கிறோம்.
ஆனால் கடந்த பத்தாண்டுகளாக நாம் பெற்று வந்த உரிமைகளும் சலுகைகளும் கடந்த ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டது. அதற்காக போராடிய ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களை பேச்சுவார்த்தைக்கு கூட அழைக்காமல் அவமதித்தது. அதோடு மட்டுமல்லாமல் போராடியவர்களை பழி வாங்கியது. அந்த நிலையை மாற்றக் கூடிய மாபெரும் சக்தியாக தமிழகத்தின் விடியலாக தலைவர் தளபதி அவர்கள் விளங்குகிறார்கள். தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று கொரோனா என்னும் கொடிய நோயின் கோரத்தாண்டவத்தை தனது செயல்பாடுகளால் கட்டுக்குள் கொண்டு வந்ததால் தமிழகம் காப்பாற்றப்பட்டு இருக்கிறது.அதுபோல ஆசிரியர் அரசு ஊழியர்கள் பெற்றுவந்த சலுகைகளும் உரிமைகளும் நிச்சயம் விரைவில் நமக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் வழங்குவார்கள் என்ற நம்பிக்கை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு உள்ளது. அதற்கிடையே ஒருசில சமூக வலைதளங்களிலும் ,சமூக ஊடகங்களிலும் வீண் வதந்திகளை பரப்பி கொண்டு அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் தளபதி அவர்கள் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவார்.எனவே சமூக ஊடகங்களில் வீண் வதந்திகளை பரப்பி தமிழக அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கேட்டுக்கொள்கிறது என கூறியுள்ளார்.
No comments:
Post a Comment