அரசின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் விரைவில் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என அறிவித்துள்ளார்இது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.தற்பொழுது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெறாமல் உள்ள சூழலில், இந்த இடைவெளியைச் சரியாகப் பயன்படுத்தி பள்ளிகள் திறப்பிற்கு முன்பாகவே, ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வை நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எடுத்திருக்கும் முடிவு சிறப்பான ஒன்றாகும். பள்ளி திறந்தவுடன் கலந்தாய்வு தொடங்குவதற்கு முடிவு செய்தால்நீண்ட நாட்களுக்குப் பின்பள்ளிகள் திறந்தபிறகு, கலந்தாய்வைத் தொடங்கினால்பள்ளி வேலைநாட்கள் பாதிக்கப்பட வாய்ப்புண்டு.
பள்ளி திறக்கப்பட்ட பின்பு, தேவையற்ற வகையில் பணிநாட்களை வீணாக்காமல் இருப்பதற்கு,
இந்த ஊரடங்கு காலத்தில் கலந்தாய்வை நடத்தி முடிக்க ஏற்பாடு செய்வது மிகச்சிறந்த முடிவு. அதற்காக தமிழ்நாடு அரசுக்கும், பள்ளிக்கல்வி அமைச்சருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஆனால் பணி மாறுதல் கலந்தாய்வை நடத்துவதற்கு முன்பாக சில முக்கியமான விசயங்களை கவனத்தில் கொண்டு பணி மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்பதை தமிழ்நாடு அரசுக்கும்,
அமைச்சருக்கும் கோரிக்கையாக வைக்கின்றேன் .
அவை
தற்பொழுது பல லட்சக்கணக்கான மாணவர்கள் புதிதாகவும், தனியார் பள்ளிகளில் இருந்தும் அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.இந்த மாணவர்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்குரிய ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்தி, பணியிடங்களுக்கும் சேர்த்து பணிமாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும். அப்பொழுதுதான் மாணவர்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை இல்லாமல் தொடர்ந்து பாடம் நடத்துவதற்கு உதவிகரமாக இருக்கும்.
புதிதாக அரசுப்பள்ளிகளுக்குள் வந்துசேர்ந்த குழந்தைகளுக்கும்,பெற்றோர்களுக்கும் இது உற்சாகமளிக்கும். கற்பித்தலும் சிறக்க இதுவே வழிவகுக்கும்.
பல்லாண்டுகளுக்கு மேலாக வட்டார வள மையங்களில் உரிய பணி செய்ய வாய்ப்பில்லாமல், புள்ளி விபரங்களைச் சேகரிக்கும் பணிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வரும் திறமைவாய்ந்த ஆசிரியப் பயிற்றுநர்களை முழுமையாக அப்பணிகளிலிருந்து விடுவித்து,அவர்களை பள்ளிகளில் கற்பித்தல் பணியிடங்களுக்கு நியமித்துவிட்டு,அதன் பிறகு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்துவது சரியான ஒன்றாக இருக்கும்.
கடந்த ஆட்சிக்காலத்தில் LKG, UKG க்கு என மாற்றுப்பணியில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை எல்லாம், அவரவர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும், அதன் பிறகே பொது மாறுதல் கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும்.
10,15 ஆண்டுகள் பணிபுரிந்தவர்களுக்கு பணி உயர்வைக் கொடுக்காவிட்டாலும் பழி வாங்குவதைப்போன்று
மழலையர் வகுப்புகளுக்கு,கடந்த ஆட்சிக்காலத்தில் நியமிக்கப்பட்ட அவலநிலை அகற்றப்படுவது அவசியம்.அதன்பிறகு புதிதாக அப்பணியிடங்களுக்கு நியமனங்களை மேற்கொள்ள வேண்டும்..
சென்னை,மதுரை, கோயம்புத்தூர் ஆகிய மாநகராட்சிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் எல்லாம் பணிநியமனம் பெற்ற காலத்திலிருந்தே அந்தந்த மாநகராட்சிக்குள்ளேயே பணிபுரிந்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசின் கீழ் பணியாற்றும் பிற ஆசிரியர்களுக்கு கிடைக்கும் பணிச்சலுகைகள் நீண்டகாலமாக இவர்களுக்கு கிடைக்காமலிருப்பது வருத்தத்திற்குரியது.
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் உள்ள காலியிடங்களுக்குச் செல்ல முடியாமல் உள்ள நிலைமாறி, பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள அனைத்துப்பணியிடங்களுக்கும் பிற ஆசிரியர்களைப் போல, இவர்களும் மாறுதல் பெற்றுச் செல்ல முடியும் என்னும் வகையில் அரசு உத்தரவிட்டு பொதுமாறுதல் கலந்தாய்வை மேற்கொள்ள வேண்டும்.குடும்பங்களைப் பிரிந்து, குழந்தைகளைப் பிரிந்து, பல்லாண்டுகளாக விடுதிகளில் தங்கிப் பணியாற்றும் குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு ஒரு விடிவுகாலம் இப்பொழுதாவது பிறக்க வேண்டும்.
ஊதியம் உள்ளிட்ட பணப்பலன்களை எல்லாம் வழங்கும் பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலேயே இம்மாநகராட்சிப் பள்ளிகளும் வர வேண்டும். வருவது ஒன்றே கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு மட்டுமல்ல, கல்வித்துறைக்கும் நல்லது.
சி.சதிஷ் குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
மாநில ஒருங்கிணைப்பாளர்
கல்வியாளர்கள் சங்கமம்
No comments:
Post a Comment