அதேசமயம் கிராமத்தில் உள்ள பெண் குழந்தைகள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு ஊக்கத்தொகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊக்கத்தொகை அடைந்து 3 முதல் ஆறாம் வகுப்பு வரை அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இதை நீட்டிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் கிராமப்புற பெண் குழந்தைகள் கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் திட்டத்தை 10 வகுப்பு வரை நீட்டிக்க தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்துள்ளது. 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்புகளை சார்ந்த மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 500 ரூபாயும், 6 ஆம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு ஆண்டுக்கு தலா 1000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment