கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.,) சேர, வரும் 28ம் தேதிக்குள் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (மகளிர்), அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 2021--22-ம் ஆண்டு பயிற்சிக்காக மாணவர் சேர்க்கை நடக்கிறது.
இரண்டு ஆண்டு பாடப் பிரிவுகளான இயந்திரப்பட வரைவாளர், கட்டடப்பட வரைவாளர், கம்மியர், மின்னணுவியல், தகவல் தொடர்பு தொழில் நுட்பம் மற்றும் மின்னணு சாதனங்கள் பராமரிப்பு, திறன் மின்னணுவியல் தொழில் நுட்பவியலாளர், கட்டடக்கலை படவரைவாளர் பிரிவுகளுக்கும், ஓராண்டு பாடப்பிரிவுகளான கம்ப்யூட்டர் ஆபரேட்டர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர், தையல் வேலை தொழில்நுட்பம், அலங்காரப் பூ தையல் தொழில்நுட்பம், சுருக்கெழுத்து மற்றும் செயலக உதவியாளர் (ஆங்கிலம்) மற்றும் சுருக்கெழுத்து மற்றும் தட்டச்சு (தமிழ்) ஆகிய பிரிவுகளுக்கும் சேர்க்கை நடக்கிறது.
விண்ணப்பிக்கும் முறைwww.skilltraining.gov.in என்ற இணையதளம் மூலம் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட விபரங்களை அறிந்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யும்போது அசல் மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் மற்றும் முன்னுரிமை கோருவதற்கான சான்றிதழ் (இருப்பின்) ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும். தொழிற்பயிற்சி நிலையத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 750 உதவித் தொகை (அனைத்து பிரிவினருக்கும்), விலையில்லா லேப்டாப், சைக்கிள், புத்தகம், காலணி, சீருடை, வரைபடக் கருவிகள் வழங்கப்படுகிறது.
கலந்தாய்வுஇணைய தளம் வழியாக கலந்தாய்வு நடத்தி சேர்க்கை நடத்தப்படும். தேர்வு செய்யப்படுவோர் பயிற்சியின் போதே பிரபல தொழில் நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் டிரெய்னிங், உதவித் தொகையுடன் வழங்கப்படும். பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு பிரபல தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும்.
இந்த இணையதள வழியிலான கலந்தாய்வில் அனைவரும் பங்கேற்று பயன்பெறலாம். தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெற விரும்புவோர் வரும் 28ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு 04142 291861, 94422 54716, 94425 59037 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். தரவரிசை பட்டியல்விண்ணப்பித்தவர்களுக்கு 31ம் தேதி மதிப்பெண் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.
இதற்காக தொழிற்பயிற்சி நிலையம் - தொழிற்பிரிவு தேர்வு செய்ய விண்ணப்பதாரர்களுக்கு குறுந்தகவல் அனுப்பப்படும். தொடர்ந்து முன்னுரிமை கோரும் விண்ணப்பதாரர்களுக்கு ஆக்ஸ்ட் 2 மற்றும் 3ம் தேதிகளில் முன்னுரிமை விருப்ப அடிப்படையில் இணையதளம் மூலமாக தொழிற் பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்யலாம்.தொடர்ந்து, 4, 5ம் தேதிகளில் விண்ணப்பதாரர்களின் முன்னுரிமை விருப்பங்களுக்கேற்ப தொழிற்பயிற்சி நிலையம் மற்றும் தொழிற் பிரிவு ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும்.
6 மற்றும் 7ம் தேதிகளில் ஆன்லைன் மூலமாக கட்டணம் செலுத்தி சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.பொதுப்பிரிவினர்பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை இணையதளம் வாயிலாக முன்னுரிமை விருப்ப அடிப்படையில் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தொழிற்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும்.
பின்னர் 11ம் தேதி தொழிற்பயிற்சி நிலையம், தொழிற்பிரிவு ஒதுக்கீடு செய்தல் மற்றும் ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். 12 முதல் 14ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக கட்டணத்தை செலுத்தி பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் சேர்க்கையை உறுதி செய்ய வேண்டும்.
No comments:
Post a Comment