ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும் - CEO Proceedings - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, July 24, 2021

ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும் - CEO Proceedings

ஆசிரியர்கள் அனைவரும்

நாள்தோறும் பள்ளிக்கு வருகை புரிதல் வேண்டும் - CEO Proceedings

ஆசிரியர்கள்  பள்ளிக்கு வருகை புரிதல் சார்ந்து   முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் - நாள்: 19.07.2021!!!


அனைத்து அரசு / தொடக்க / நடுநிலை | உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு


பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாள்தோறும் பள்ளி வேலை நேரத்திற்கு பள்ளிக்கு வருகைபுரிந்து புதியதாக சேர்ந்த மாணவர்களின் விவரங்களை EMIS இணைய தளத்திலும் மாணவர் வருகைப்பதிவேட்டிலும் பதிவினை மேற்கொள்ள தெரிவிக்கலாகிறது.


மாணவர்களின் சேர்க்கை பதிவேடு மற்றும் வருகைப்பதிவேடு போன்ற பணிகளை ஆசிரியர்கள் மேற்கொள்ள நடவடிக்கைாடுக்க தெரிவிக்கலாகிறது.



மாணவர்களின் IT விவரங்களை 20.07.2021 5.00 மணிக்குள்ளாக எந்த ஒரு மாணவர்கள் பதிவுகள் விடுபடாமல் மேற்கொண்டு அனைத்து மாணவர்கள் விவரங்கள் பதிவு செய்யப்பட்டது என்ற சான்றினை 20.07.2021 அன்றே திருப்பத்தூர் முதன்மைக்கல்வி அலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கல்வி தொலைக்காட்சியை அனைத்து மாணவர்களும் தங்கள் இல்லங்களில் கவனிக்கின்றார்களா என்பதை பாட ஆசிரியர்கள் உறுதி செய்துகொள்ளவேண்டும் என தெரிவிக்கலாகிறது.


உயர் தொழில் நுட்ப ஆய்வகத்தின் ( High Tech Lab ) மூலமாக பாடம் சார்ந்த தகவல்களை பெற ஆய்வகமானது செயல்பாட்டில் உள்ளதை தலைமை ஆசிரியர்கள் உறுதிசெய்துகொள்ளவேண்டும்.

முதன்மைக்கல்வி அலுவலர்

திருப்பத்தூர்




No comments:

Post a Comment