தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை – கடுமையான போட்டி! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, July 21, 2021

தமிழக கல்லூரிகளில் ஆன்லைன் வழி மாணவர் சேர்க்கை – கடுமையான போட்டி!

தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகள் வெளியானதையடுத்து ஆன்லைன் மூலம் கல்லூரி மாணவர் சேர்க்கையை நடத்த உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் படையெடுத்து வந்து விசாரித்த வண்ணம் இருக்கின்றனர்.

ஆன்லைன் மாணவர் சேர்க்கை:
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களுக்கு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மதிப்பெண்கள் முறைகளை தீர்மானிக்க அரசு சார்பில் குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் பரிந்துரையின் பேரில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு ஜூலை 19ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் தமிழகத்தில் அனைத்து 12ம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர். இந்த நிலையில் புதிய கல்வியாண்டில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஆன்லைனில் நடைபெறும் என அரசு அறிவித்துள்ளது.
புதிய கல்வியாண்டில் பொறியியல், கலை & அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கு வருகிற 26ம் தேதி முதல் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா காலம் என்பதால் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் கல்லூரிகளில் கூடினால் நோய் பரவும் அபாயம் ஏற்படும் எனவே கல்லூரி நிர்வாகங்கள் ஆன்லைன் மூலம் சேர்க்கையை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து கல்லூரி வாயிலில் இது குறித்த அறிவிப்புகள் ஒட்டப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள பல அரசு, தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் நேரில் சென்று விசாரிக்க தொடங்கினர். இந்த ஆண்டு கல்லூரிகளில் இடம் பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. கல்லூரிகளில் உள்ள பாடப்பிரிவு, சீட்டுகள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து கல்லூரி பணியாளர்களிடம் விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சேர்க்கை குறித்த அறிவிப்பு மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டு ஆன்லைனிலேயே நடைபெறும் என கல்லூரி நிர்வாகங்கள் பதிலளித்து வருகின்றன.

No comments:

Post a Comment