தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை திறக்கலாம் - மருத்துவ வல்லுநர்கள் யோசனை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, July 27, 2021

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை திறக்கலாம் - மருத்துவ வல்லுநர்கள் யோசனை

தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகளை

திறக்கலாம் - மருத்துவ வல்லுநர்கள் யோசனை


கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப்பள்ளிகளை திறக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் குழு தெரிவித்துள்ளது.


குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப் பள்ளிகளை திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.


தமிழ்நாட்டில் இதுவரை 25 லட்சத்து 48 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில், 93 ஆயிரத்து 82 பேர் 12 வயதுக்குட்பட்டவர்கள். அதாவது மொத்த பாதிப்பில் 3.6 விழுக்காடு மட்டுமே குழந்தைகள் ஆவர். _கொரோனா வைரஸ் உடலில் ஒட்டிக் கொள்வதற்கான ACE ரிசப்டார் எனப்படும் செல்கள் குழந்தைகள் உடலில் முழுமையாக வளராமல் இருக்கும் என்பதால், அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் தீவிர பாதிப்பு ஏற்படுவதில்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்._


பள்ளிகளை திறக்கும் முன் ஆசிரியர்கள் மற்றும் அங்கு பணியாற்றும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது அவசியம் என்று மருத்துவர் அஸ்வின் வலியுறுத்தியுள்ளார்.


18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்துவது தற்போது முன்னுரிமை கிடையாது என்றும், பல நாடுகள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தாமல் வெற்றிகரமாக பள்ளிகளை நடத்தி வருவதாகவும் உலக சுகாதார நிறுவன தலைமை விஞ்ஞானி சௌம்யா சாமிநாதன் தெரிவித்துள்ளார்.


Published by:Arun

First published:July 27, 2021, 19:15 IST


Source: News 18

No comments:

Post a Comment