கொடுத்து மகிழூம் வாரம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 5, 2014

கொடுத்து மகிழூம் வாரம்

அக்., 2ம் தேதியில் இருந்து 8ம் தேதி வரை, அனைத்து பள்ளிகளிலும், கொடுத்து மகிழும் வாரம் கொண்டாட பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்துமாறு, பள்ளி கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதில், தங்கள் மனங்கவர்ந்த ஆசிரியர்களின் பணியை பாராட்டி, நன்றியோடு, கட்டுரை எழுதலாம். மாணவர்களின் வசிப்பிடத்துக்கு அருகில் வசிக்கும் ஆதரவற்றோர், இயலாதவர்களுக்கு, தங்களால் முடிந்த பரிசுப் பொருட்களை கொடுத்து உதவலாம் என்பன உட்பட பல்வேறு வித்தியாசமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இந்நிலையில், அக்., 6ம் தேதி வரை, முதற்பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்., இரண்டாவது வாரம், 'கொடுத்து மகிழும் வாரம்', பள்ளிகளில் கடைபிடிக்கப்பட உள்ளது. பள்ளிகளில் கொண்டாடப்பட்ட விபரத்தை, பள்ளி கல்வி இயக்குனருக்கு தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment