பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச திறனறித் தேர்வு: லிம்ரா நிறுவனம் நடத்துகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 11, 2015

பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவச திறனறித் தேர்வு: லிம்ரா நிறுவனம் நடத்துகிறது

மருத்துவப் படிப்பு படிப்பதற்கான கல்வித் திறன் தங்களிடம் உள்ளதா என்பதை பிளஸ் டூ படிக்கும் மாணவ, மாணவிகள் தெரிந்துகொள்ள உதவும் வகையில் இலவச திறனறித் தேர்வு மே 3-ம் தேதி நடக்கவுள்ளது.
இத்தேர்வை நடத்தும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:

தங்கள் பிள்ளைகளை எம்.பி.பி.எஸ். படிக்க வைக்க பெற்றோர்களுக்கும், டாக்டராகும் அசை மாணவர்களுக்கும் உள்ளது. ஆனால், அவர்களிடம் அதற்கான கல்வித் திறன் இருக்கிறதா என்பதை அறிந்துகொள்ள உதவுவதற்காக இலவச திறனறித் தேர்வு நடக்கவுள்ளது.2015 ஆம் ஆண்டில், பிளஸ் 2 தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் இந்த தேர்வை எழுதலாம்.சென்னையில் 6 மையங்களிலும், மதுரை, கோயம்புத்தூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, வேலூர், காரைக்குடி, நாகர் கோவில், கும்பகோணம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒரு மையத்திலும் இத்தேர்வு நடத்தப்படும்.

விருது, பரிசு

தேர்வில் கலந்துகொள்ளும் அனைவருக்கும், சென்னை பாரத் பல்கலைக்கழகமும் லிம்ரா நிறுவனமும் இணைந்து சான்றிதழை வழங்கும்.

தமிழக அளவில் முதல் மதிப்பெண் பெற்ற 10 பேருக்கு, சென்னையில் நடக்கும் விழா ஒன்றில் விருதுகளும், பரிசுகளும் வழங்கப்படும்.www.limratalenttest.com என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை டவுண்லோட் செய்தோ, ஆன்-லைன் மூலமோ விண்ணப்பிக்கலாம். 

மேலும்விவரங்களுக்கு 9444614353,9444615363, 9445783333 மற்றும் 9445483333 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்.

இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment