TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, April 11, 2015

TETஎழுத தேவையில்லை வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

மே மாதம் 2010ஆம் ஆண்டில் சான்றிதழ் சரிபார்ப்பு கலந்து கொண்ட ஆசிரியர்கள் வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.NCTE விதி படி,
23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட 94 ஆசிரியர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.இதை விசாரித்த அமர்வு நீதிமன்றம் தகுதித் தேர்வு இன்றி எதிர்காலத்தில் ஏற்படும் காலிபணியிடங்களில் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுஉத்தரவு பிறப்பித்துள்ளது .இதை எதிர்த்து அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது .இதை விசாரித்த உச்சநீதிமன்றம் NCTE விதி படி 23.08.2010 முன்பு சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் தகுதித் தேர்வு எழுத தேவையில்லை வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்என்றும் இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றம் செய்து 5 கேள்விகளுக்கு விளக்கம் அளித்து தீர்ப்பு அளிக்க உத்தரவு பிறப்பித்துள்ளது .எனவே இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 15ஆம் தேதி அன்று இறுதி விசாரணைக்கு வருகிறது.

Thanks To,
Mr.Abi Mudugadoss

No comments:

Post a Comment