அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, April 8, 2015

அகில இந்திய அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்

பிளஸ்–2 தேர்வை எழுதிய மாணவர்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான முறைகளை மேற்கொண்டு வருகின்றனர். என்ஜினீயரிங், மருத்துவம், அறிவியல் சார்ந்த படிப்புகள், கப்பல், விமானம் போன்ற தொழில் நுட்ப படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்படிப்புகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஐ.ஐ.டி., என்.ஐ.டி. போன்ற தொழில்நுட்ப கல்லூரிகளில் சேர நுழைவுத்தேர்வு நடைப்பெற்று வருகின்றன. முதல் கட்டமாக பேனா, காகிதம் மூலம் எழுதக்கூடிய எழுத்து தேர்வு நடந்து முடிந்துள்ளது. வருகிற 10 மற்றும் 11–ந்தேதிகளில் ஆன்–லைன், மெயின் நுழைவுத்தேர்வு நடக்கிறது. இது தவிர தனியார்
பல்கலை கழகங்கள் நடத்தும் நுழைவுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. இந்த தேர்வுகளை சந்திக்க மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி வகுப்புகள் தமிழகம் முழுவதும் தற்போது நடைபெற்று வருகின்றன.
இதே போல அகில இந்திய அளவில் மருத்துவ கல்லூரிகளில் சேரவும் மாணவர்கள் நுழைவுத் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு சென்று வருகின்றனர். ஏ.ஐ.பி., எம்.டி, எய்ம்ஸ், ஜிப்மர், சி.எம்.சி., மணிப்பால் மருத்துவ கல்லூரி உள்ளிட்ட பல தனியார் நிகர்நிலை மருத்துவ பல்கலைகழகங்களில் சேர்ந்து படிக்கவும் மாணவர்கள் மத்தியில் போட்டி நிலவுகிறது.
தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ் படிக்க பல லட்சங்களை கொட்டினால் மட்டுமே இடம் கிடைக்கும். ஆனால் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் எம்.சி.ஐ. நிர்ணயித்துள்ள அரசு கட்டணம் ஆண்டிற்கு ரூ.11000 மட்டும் செலுத்தினால் போதுமானது. ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பு 3 பாடங்களின் ஒட்டுமொத்த மதிப்பெண்ணில் அடங்கியுள்ளது.
அதில் ஒன்று, இரண்டு மார்க் குறைந்தால் கூட அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைக்காது. அதனால் நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை நம்பி செல்கின்றனர். நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றால் டாக்டர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் பல பெற்றோர்கள் மருத்துவ படிப்பு நுழைவு தேர்வு பயிற்சி வகுப்புகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்து வருகின்றனர்.
சென்னையில், அண்ணா நகர், தியாகராயநகர், அடையார், வளசரவாக்கம், கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை, நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல நகரங்களில் இந்த பயிற்சி வகுப்புகள் தற்போது தொடங்கி நடந்து வருகின்றன. சென்னையில் உள்ள பயிற்சி மையங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
ஒரு மாதத்திற்கு பயிற்சி கட்டணமாக ரூ.10 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரை வசூலிக்கிறார்கள். வெளியூரில் இருந்து மாணவர்கள் தங்கியும் இந்த பயிற்சியை பெறுகிறார்கள். காலை மற்றும் மாலை என 2 பகுதியாக பிரித்து வகுப்புகள் நடத்தப்படுகின்றன. மருத்துவ நுழைவுத் தேர்வு மே மாதம் முதல் வாரத்தில் இருந்து ஒவ்வொன்றாக நடைபெறுகின்றன. ஆன்லைன் மூலமாக நடக்கும் இந்த தேர்வை பல லட்சம் மாணவ–மாணவிகள் எழுதுகிறார்கள். இதில் மார்க் பட்டியலில் இடம் பெறுவேருக்கு எம்.பி.பி.எஸ். ‘சீட்’ கிடைக்கும்.

No comments:

Post a Comment