அரசு பள்ளிகளில் இசையை, நிரந்தர பாடமாக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மாநிலத்தில், சில ஆண்டுகளாக ஓவியம், இசை, உடற்கல்வி உட்பட சிறப்பாசிரியர் பணியிடங்கள், நேரடியாக நிரப்பப்படவில்லை. மாறாக, தொகுப்பூதிய அடிப்படையில், ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், ஆசிரியர் தேர்வு வாரியம்,'போட்டி தேர்வு மூலம், 530 உடற்கல்வி, 250 ஓவியம், 160 தையல், 55 இசை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர்' என, அறிவித்துள்ளது. இதில், இசைக்கு, வெறும், 55 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவர் என்ற அறிவிப்பு, இசை ஆசிரியர் பயிற்சி பெற்றோர் மத்தியில், அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், ஊட்டியைச் சேர்ந்த வாசுதேவன் சேகரித்த விபரங்களின் அடிப்படையில், மாநில முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு;பள்ளி கல்வித் துறையில், இசை பாடம், வெறும் 300 பள்ளிகளில் தான், நிரந்தரப் பாடமாக உள்ளது. அரசுப் பள்ளிகளில் இசை ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர்.இது ஒரு புறமிருக்க, இசைத் துறையில், மூன்றாண்டு பட்டயம், இரண்டாண்டு முதுகலை பட்டப்படிப்பு படிக்க, அரசு நிதியுதவி வழங்கினாலும், வேலை வாய்ப்பு இல்லாத நிலையில், இந்த படிப்புகளை தொடர, இளைஞர்கள் முன் வருவதில்லை. எனவே, அரசு பள்ளிகளில், இசைப் பாடத்தை நிரந்தர பாடமாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு, வாசுதேவன் மனுவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment