தொடக்க பள்ளிகளில் யோகா பயிற்சி: அமெரிக்க கோர்ட் அனுமதி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 5, 2015

தொடக்க பள்ளிகளில் யோகா பயிற்சி: அமெரிக்க கோர்ட் அனுமதி

தொடக்கப் பள்ளிகளில் யோகா வகுப்புகள் நடத்தலாம்; அதற்கு தடை விதிக்க முடியாது; யோகா வகுப்புகள் நடத்துவது, மாணவர்களின் மத உரிமையை மீறும் செயலாகாது' என, அமெரிக்க கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.
கலிபோர்னியாவை சேர்ந்தவர் ஸ்டீபன். இவர், உள்ளூர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், 'கலிபோர்னியா மாகாணத்தின் சட்ட விதிகளை மீறி, இந்து மற்றும் புத்த மதத்தை புகுத்தும், என்சினிடாஸ் மாவட்ட பள்ளியின், யோகா வகுப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும்' என, கோரிஇருந்தார். இவ்வழக்கில், 'யோகா கற்றுத்
தருவது, குழந்தைகளின் மத சுதந்திரத்தை பறிப்பதாகாது' என, தீர்ப்பு வழங்கப்பட்டது. இதைஅடுத்து, சான்டியாகோ கோர்ட்டில், ஸ்டீபன் மேல்முறையீடு செய்தார்.

இம்மனுவை விசாரித்த, மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, 'யோகா வகுப்புகளுக்கு தடை விதிக்க முடியாது என்ற கீழ் கோர்ட்டின் தீர்ப்பு செல்லும்' என, தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் விவரம்:யோகா பயிற்சி, ஒருசில சூழலில் மத சம்பந்தப்பட்டதாக இருந்தாலும், என்சினிடாஸ் பள்ளியில் கற்பிக்கப்படும் யோகா என்பது, மதம், மாந்திரீகம் அல்லது ஆன்மீகம் சாராதது என்ற கீழ்கோர்ட்டின் தீர்ப்பு சரியானதே. யோகா வகுப்பு குறித்த வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், அது மதச்சார்பற்ற கலை என்பதும், அதில் மதத்தை புகுத்துவதாக கூறப்படும் குற்றச்சாட்டிற்கு எந்த முகாந்திரமும் இல்லை என்பதும் தெரிய வந்துஉள்ளது. அதனால், கலிபோர்னியா சட்ட விதிகளை, பள்ளி நிர்வாகம் மீறவில்லை. இவ்வாறு, தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

* இந்தியாவின் யோகா கலை, 5,000 ஆண்டுகள் பாரம்பரியமிக்கது; ஆன்மிக பயிற்சி மூலம், உடலையும், மனதையும் யோகா பக்குவப்படுத்துகிறது.
* பிரதமர் மோடியின் பரிந்துரையை ஏற்று, 'ஜூன் 21ம் தேதி, சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படும்' என, ஐ.நா., அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment