வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உண்மையான சேவைக்கட்டண விவரம் இதுதான் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, April 5, 2015

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உண்மையான சேவைக்கட்டண விவரம் இதுதான்

வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தின் உண்மையான சேவைக்கட்டண விவரம் இதுதான். நீங்கள் இடைத்தரகர்களுக்கு எவ்வளவு கொடுக்கின்றீர்கள்? நம் கண்களால் நாம் காண பிறரை நாடலாமா?
1.10.2001 முதலான நடைமுறை விவரம்.
ஓட்டுநர் உரிமம் சம்மந்தப்பட்டவை.
பழகுநர் உரிமம் பெற ரூ.30
ஒரு வாகனத்துக்கு புதிய ஓட்டுநர் உரிமம் பெற ரூ.200.
இரு வாகனத்துக்கு புதிய ஓட்டுநர் உரிமம் பெற ரூ.250.
ஓட்டுநர் உரிமத்தில் மற்றொரு வாகனத்தை மேற்குறிப்பு செய்ய ரூ.200.
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க ரூ.165.
ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க கால தாமதக் கட்டணம் ரூ.20 (ஒவ்வொரு வருடத்திற்கும்).
ஓட்டுநர் உரிமத்தில் முகவரி மாற்றம் செய்ய ரூ.165.
புதிய வாகனம் பதிவு செய்யப்படுதல் சம்மந்தப்பட்டவை.
இரு சக்கர வாகனத்திற்கு ரூ.60.
மகிழுந்துக்கு ரூ.200.
பதிவுச் சான்றில் உரிமையாளர் பெயர் மாற்றம்.
இரு சக்கர வாகனத்திற்கு ரூ.30.
மகிழுந்துக்கு ரூ.100.
பதிவுச்சான்றில் விலாச மாற்றம்.
இரு சக்கர வாகனம் மற்றும் மகிழுந்துக்கு ரூ.20.
தவணைக் கொள்முதலை மேற்குறிப்பு அல்லது ரத்து செய்தல்.
இரு சக்கர வாகனத்துக்கு ரூ.100.
வாகனப் பதிவுச் சான்றைப் புதுப்பித்தல்.
இரு சக்கர வாகனத்துக்கு ரூ.60.
மகிழுந்துக்கு ரூ.200.
தகுதிச் சான்றைப் புதுப்பித்தல்.
இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத்துக்கு ரூ.200.
இலகு ரக வாகனத்துக்கு ரூ.300.
நடுத்தர வாகனத்துக்கு ரூ.400.
கனரக வாகனத்துக்கு ரூ.500.

No comments:

Post a Comment