தமிழ்நாடு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயற்சி நிறுவன இயக்குனரின் செயல்முறைகளின் படி கற்றல் கற்பித்தல் புதுமை புனைதல் மற்றும் கல்வி சார் கணினி வளங்கள் சேகரிக்க இணையதள பக்கத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள சுமார் ஐந்தரை லட்சம் ஆசிரியர்களில் 1526 ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
பெறப்பட்ட இப் பட்டியலிலிருந்து முதற்கட்டமாக 75 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.75 ஆசிரியர்களில் சிவகங்கை
மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் ஒருவர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் ( மேல்நிலை,உயர்நிலை,நடுநிலை,தொடக்கப் ) பள்ளிகளில் இப்பள்ளி ஒன்று மட்டுமே தேர்வாகி உள்ளது பாராட்டுதலுக்குரியது. புதுமை புனைதல் என்னும் தலைப்பின் கீழ் காணொலி ஆவணம் செய்யும் பொருட்டு இயக்குநரின் ஆணைப்படி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனக் குழுவைச் சேர்ந்த படப்பிடிப்புக்குழு சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளிக்கு 5/5/2015 அன்று வருகை புரிய உள்ளது. அச்சமயம் இப்பள்ளியில் ஆவணப்படம் தயாரிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment