2015-2016-ஆம் கல்வியாண்டில், முதலாமாண்டு பட்டயப் படிப்பில் (டிப்ளோமா) சேருவதற்கு பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான படிப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அனைத்து அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் (பாலிடெக்னிக்) நடைபெறும் முதலாமாண்டு பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் நடைபெறும் பகுதிநேர பட்டயப் படிப்புச் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவங்கள் 41 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 18.5.2015 முதல் 05.06.2015 முடிய கல்லூரி வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழங்கப்படும்.தொழிற்படிப்பு இடையே புகுத்தப்பட்ட பட்டயப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களும்அத்தகைய படிப்பு நடத்தப்படும் பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வழங்கப்படும்.
மாணவர்கள் தங்கள் இருப்பிடத்திற்கு அருகிலுள்ள அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் விண்ணப்பங்களை மே மாதம் 18-ஆம் தேதி முதல் நேரில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பப் படிவத்தின் விலை ரூ.150/-. நேரில் விண்ணப்பம் பெற விரும்புவோர் ரூ.150/-ஐ ரொக்கமாகச் செலுத்தியும், அஞ்சல் மூலம் பெறவிரும்புவோர் ரூ.150/-க்கான கோடிட்ட வங்கி கேட்பு வரைவோலையினை சம்பந்தப்பட்ட "முதல்வர்" பெயரில் எடுத்து, சுயவிலாசமிட்ட 30 செ.மீ.X2.5 செ.மீ. அளவுள்ள உறையில் ரூ.15/-க்கான அஞ்சல் வில்லை ஒட்டி அனுப்பி பெற்றுக்கொள்ளலாம்.தமிழ்நாட்டைச் சார்ந்த பட்டியல்/பழங்குடி இனத்தவருக்கு விண்ணப்பக் கட்டணத்திலிருந்து விலக்களிக்கப்படுகிறது. அவர்கள் சாதிச் சான்றிதழின் சான்றொப்பமிட்ட நகலைச் சமர்ப்பித்து விண்ணப்பத்தினை இலவசமாகப் பெற்றுக் கொள்ளலாம். மேலும், விண்ணப்பத்தினை www.tndte.com என்ற இணையதளத்திலிருந்தும் மே மாதம் 18-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் அந்தந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளுக்கு வந்து சேரவேண்டிய கடைசி நாள் 05.06.2015 ஆகும். இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment