2015-ம் கல்வியாண்டில், பிளஸ்-2 பொதுத்தேர்வில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் 82.27 சதவீத மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் மற்றும் அரசு உண்டு உறைவிடப்பள்ளிகளில் பயின்று முதல் 3 இடங்களை பிடித்த மாணவ / மாணவியர்களான அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி பி.காஞ்சனா (1122 மதிப்பெண்கள்), அரக்கோணம் ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜி.ஜெயஜோதி (1101 மதிப்பெண்கள்) மற்றும்
திருநெல்வேலி மாவட்டம், நல்லம்மாள்புரம் ஆதிதிராவிடர் நல ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் எம்.பாலகிருஷ்ணமூர்த்தி (1101 மதிப்பெண்கள்), கரூர் மாவட்டம் புன்னம் ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளி மாணவர் எம். சுவின் (1091 மதிப்பெண்கள்) ஆகியோர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரை சந்தித்து ஆசி பெற்றனர். அப்பொழுது, ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் சு.சிவசண்முகராஜா உடனிருந்தார்.
No comments:
Post a Comment