சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு - மத்திய அரசின் புதிய மசோதா சொல்வது என்ன? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, May 1, 2015

சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு - மத்திய அரசின் புதிய மசோதா சொல்வது என்ன?

நாட்டில் விபத்துகளும், அதன் காரணமாக உயிர் இழப்புகளும் அதிகரித்து இருப்பதால், பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சாலை போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு தயாரித்து உள்ளது. அந்த மசோதாவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* பாதுகாப்பற்ற நிலையில் உள்ள வாகனத்தை ஓட்டினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

* மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.25 ஆயிரம் அபராதம் அல்லது அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். மேலும் 6 மாதங்களுக்கு உரிமம் (லைசென்சு) நிறுத்தி வைக்கப்படும். அதே தவறை 3 ஆண்டுகளுக்குள் இரண்டாவது முறையாக செய்தால் ரூ.50 ஆயிரம் அபராதம் அல்லது ஓராண்டு வரை சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்ந்து விதிக்கப்படும். மேலும் ஓராண்டுக்கு உரிமம் நிறுத்தி வைக்கப்படும். அதன்பிறகும் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனம் 30 நாட்களுக்கு முடக்கி வைக்கப்படும்.

* பள்ளிக்கூட வாகன ஓட்டுனர்கள் குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனையுடன் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஓட்டுனர் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்படும்.

* சில சூழ்நிலைகளில் விபத்தில் குழந்தைகள் மரணம் அடைய நேரிட்டால் ரூ.3 லட்சம் அபராதமும், 7 ஆண்டுகளுக்கு குறையாமல் சிறை தண்டனையும் வழங்கப்படும்.

* போக்குவரத்து சிக்னலை 3 முறை மீறினால் ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு ஒரு மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும். எனவே மீண்டும் கட்டாயமாக ஓட்டுனர் பயிற்சி பெற வேண்டும்.

No comments:

Post a Comment