சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அலைக்கழிப்பு! பொதுசேவை மையத்தில் குளறுபடி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, May 13, 2015

சான்றிதழ் கிடைக்காமல் மாணவர்கள் அலைக்கழிப்பு! பொதுசேவை மையத்தில் குளறுபடி

பொது சேவை மையங்களில் பதிவு செய்தாலும், "சர்வர்' பிரச்னையால், சான்றிதழ் பெற 10 நாட்கள் வரை அலைக்கழிக்கப்படுவதாக, மாணவர்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பிளஸ் 2 தேர்வு முடிவுக்கு பிறகு ஜாதிச்சான்று, முதல் பட்டதாரி சான்று, இருப்பிடச்சான்று உள்ளிட்டவற்றை பெற, பொது சேவை மையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. அனைத்து "இ-சேவை' மையங்களும், பொதுவான எல்காட் "சர்வர்' உடன் இணைக்கப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில், அனைத்து மையங்களில் இருந்து தகவல் பதியப்படுவதால், பயன்படுத்துவதால், "சர்வர்' வேகம் குறைந்து, பணிகள் பாதிக்கப்படுகின்றன. ஒரு மனுவை பதிவு செய்ய, 20 நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டியுள்ளது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பொதுசேவை மையத்திலும், "சர்வர்' கோளாறு காரணமாக, பணிகள், மிகவும் மந்தமாக நடைபெறுகின்றன; கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் உள்ளிட்டோரும் தங்களது பணிகளை செய்ய முடிவதில்லை. இதனால், பதிவு செய்தவர்களுக்கான சான்றுகள் கிடைக்க, ஒரு வாரம் முதல் 10 நாட்கள் வரை ஆகிவிடுகிறது.

"கவுன்சிலிங்' உள்ளிட்ட பணிகளுக்கு, சான்றிதழ்கள் அவசியம் தேவைப்படுவதால், பொதுமக்கள் பொதுச்சேவை மைய பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்கின்றனர். எனவே, இத்தகைய பிரச்னைகளுக்கு, மாவட்ட நிர்வாகம் தீர்வு காண வேண்டும். அதிக எண்ணிக்கையில், சான்று வழங்க வேண்டியிருப்பதால், ஒவ்வொரு தாலுகாவிலும் சிறப்பு முகாம் நடத்த வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.அரசு கேபிள் பொது சேவை மைய பொறுப்பு அதிகாரிகளிடம் கேட்டபோது, "சான்றிதழ் வழங்குவதில் தாமதம் ஏற்பட, அடிக்கடி சர்வரில் கோளாறு ஏற்படுவதே காரணம். இருப்பினும், பதிவு செய்வதை எளிதாக்கும் புதிய தொழில்நுட்பம், அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள ஒன்பது சேவை மையங்களிலும், "சர்வர்' வேலை செய்யாத தருணத்தில், புதிய தொழில்நுட்பத்தில் பணிகளை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது,' என்றனர்.

மாணவர்கள் அவதி
பொது சேவை மையங்களில், இருப்பிடம் மற்றும் வருமான சான்றுகள் பெற இரண்டு வாரம் வரை காலதாமதம் ஏற்படுவதால், முதல்பட்டதாரி சான்று பெறுவதில் நீண்ட தாமதம் ஏற்படுகிறது. இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்ல குறித்த காலத்தில் விண்ணப்பிக்க முடியுமா? என, மாணவர்களிடையே கவலை ஏற்பட்டுள்ளது. "ஆன்-லைனை' நம்பி இயங்கும் பொது சேவை மையங்கள், சரியான நேரத்தில் காலை வாரி விடுவது போல் மாறி வரு கின்றன. எனவே, தாலுகா அலுவலகம் தோறும், துணை தாசில்தார் தலைமையில் குழுவை அமைத்து, விரைந்து சான்றிதழ்கள் வழங்க, மாற்று ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும் என மாணவர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment