ஓ............ இதுக்குப் பெயர் தான் கல்வி உரிமையா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 4, 2015

ஓ............ இதுக்குப் பெயர் தான் கல்வி உரிமையா?

மழலையர் வகுப்பு முதல் முதுகலை வகுப்புவரை
அனைவருக்கும் இலவசமான தரமான சமமான கல்வியை
வழங்கவேண்டிய அரசு
சுதந்திரமடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகு
சும்மா பேருக்கு போட்டதொரு சட்டம்..
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்னு பேரு....
எத்தனையோ சரத்துகள் இருக்கின்றன..
இத்தனை அக்கறை காட்டப்படவில்லை.

இதுபோல்....
தனியார் பள்ளிகளில் 25% இட ஒதுக்கீட்டுக்கு
தனியான ஆர்வம்...- கொஞ்சமும்
தணியாத ஆர்வம்!
பலே பலே...
ஒத்த கல்லில் எத்தனை மாங்காய்கள்??????
தரமான கல்வி தனியார் பள்ளிகளில் மட்டுமே
தாராளமாகக் கிடைப்பதாக ஒரு
தோற்றத்தை ஏற்படுத்தியாச்சு..

முதலாவது மாங்காய்!
கல்வி உரிமை என்பதே
தனியார் பள்ளிகளில்
இந்த 25% இட ஒதுக்கீட்டைப் பெறுவது தான்
என்ற புரிதலை ஏற்படுத்தியாயிற்று..
இரண்டாவது மாங்காய்!!
இச்சட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு
25% இட ஒதுக்கீட்டீன் மூலம்
தனியார் பள்ளிகளுக்கு
திருப்பப்பட்ட குழந்தைகள் சுமார் 1 இலட்சம்...
இது மூன்றாவது மாங்காய்!!!
வரவேண்டிய குழந்தைகள்
தனியாருக்கு திருப்பிவிடப்பட்டதால்
தத்தளிக்கும் நிலையில்
அரசுப் பள்ளிகள்......
குழந்தைகள் இல்லையெனச் சொல்லி
தாராளமாக அடைத்துக் கொள்ளலாம்...
இது நான்காவது மாங்காய்????

1 இலட்சம் குழந்தைகள்...
தலா 50 குழந்தைகள் என வைத்தாலும்
அடேயப்பா...
2000 பள்ளிகளுக்கான குழந்தைகள் காலி!
2000 பள்ளிகளுக்கு
தலா இரண்டென்றாலும்
4000 ஆசிரியர்கள் காலி....
இது அடுத்த மாங்காய்????
4000 ஆசிரியர்களுக்கு
தலா 30000 வைத்தாலும்
மாதத்திற்கு 12 கோடி மிச்சம்...
ஆண்டிற்கு 144 கோடி மிச்சம்...
தீபாவளி, பொங்கல் போனஸ் மிச்சம்..
ஓய்வூதியம் மிச்சம்...
இது அடுத்த மாங்காய்??????
மிச்சம் இருக்கும் பணம்
மக்களுக்குத் தானே போகும்?
அடப் பாவிப் பயலுகா.........

மெட்ரிக் பள்ளிகளுக்கு இந்த ஆண்டு
மட்டுமே சுமார் 100 கோடிகள்...
அடுத்த ஆண்டு?
அதுக்கடுத்த ஆண்டு??
அத்தனை அரசுப் பள்ளிகளையும் காலிசெய்த பிறகான
மொத்தத் தொகை???
குழந்தைகளே இல்லை எனும்போது
பள்ளிகள்???
பள்ளிகளே இல்லை எனும்போது
ஆசிரியர்கள்?????
ஆசிரியர்களே இல்லை எனும்போது
சங்கங்கள்????
சங்கங்களே இல்லைஎனும் போது
ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள்
அடுத்த ஊதியக் கமிஷனுக்கான
அடுத்த கட்ட போராட்ட அறிவிப்புகள்?????
அப்பாடா அரசாங்கத்திற்கு நிம்மதியல்லவா!!!
இதுதான் பெரிய மாங்காய்!!!
மக்கா..................
முழிச்சுப் பாருங்க மக்கா...................!!!!!??????????????!!!!!!!!!!
தேனி.தே.சுந்தர்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம்
அழைக்க: 94880 11128

No comments:

Post a Comment