கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வுத்தேர்வு விண்ணப்பிக்க 28–ந் தேதி கடைசி நாள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 26, 2015

கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வுத்தேர்வு விண்ணப்பிக்க 28–ந் தேதி கடைசி நாள்

கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடக்கிறது. இந்த தேர்வுக்கு வருகிற 28–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இதுகுறித்து அரசு தேர்வுகள் நெல்லை மண்டல துணை இயக்குனர் மஹதாப்பானு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–திறனாய்வு தேர்வு
கிராமப்புற மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு நடத்தப்பட உள்ளன. ஊரகப்பகுதிகளில் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 2014–2015 கல்வி ஆண்டில் 8–ம் வகுப்பு தேர்ச்சியுடன் 50 சதவீதம் மதிப்பெண்கள்
பெற்று தற்போது 9–ம் வகுப்பு படித்து கொண்டு இருக்க வேண்டும்.இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோர், பாதுகாவலரின் ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். அதற்கான வருமான சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தேர்வு கட்டணமாக ரூ.5–, சேவை கட்டணம் ரூ.5– என மொத்தம் ரூ.10 செலுத்த வேண்டும்.இணையதளம் மூலம் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, அதை பூர்த்தி செய்து பணமாக பள்ளி தலைமை ஆசிரியர்கள் வாயிலாக முதன்மை கல்வி அலுவலரிடம் செலுத்த வேண்டும்.28–ந் தேதிக்குள்...
வருகிற 28–ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது.ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்படும் 100 பேருக்கு (50 மாணவர்கள், 50 மாணவிகள்) 9–ம் வகுப்பு முதல் பிளஸ்–2 வரை ஆண்டு தோறும் ரூ.1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்.நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவர்களும், ஆங்கிலோ இந்தியன், மெட்ரிகுலேசன் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாது.இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment