பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம்: தீய பழக்கங்களில் இருந்து விடுபட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கலெக்டர் ஹரிகரன் அறிவுரை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, August 26, 2015

பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம்: தீய பழக்கங்களில் இருந்து விடுபட மாணவர்களுக்கு கவுன்சிலிங் கலெக்டர் ஹரிகரன் அறிவுரை

திண்டுக்கல்,பள்ளிகளில் புகார் பெட்டி கட்டாயம் வைப்பதோடு, தீய பழக்கங்களில் சிக்கியுள்ள மாணவர்களை விடுபட ஆசிரியர்கள் கவுன்சிலிங் வழங்க வேண்டும் என்று கலெக்டர் ஹரிகரன் அறிவுறுத்தி உள்ளார்.பள்ளிகளில் புகார் பெட்டிகள்
திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் ராக்கிங் தடுப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம், கலெக்டர் ஹரிகரன் தலைமையில் சமீபத்தில் நடந்தது. இதில் கல்வித்துறை, போலீஸ் துறை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பள்ளி, கல்லூரிகளில் புகார் பெ
ட்டிகள் வைக்கப்பட்டுள்ளதா? அதனை பயன்படுத்தும் விதம் குறித்து கலெக்டர் கேட்டறிந்தார்.மேலும் அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும் கட்டாயம் புகார் பெட்டிகள் வைக்கப்பட வேண்டும். இதனை தலைமை ஆசிரியர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். புகார் பெட்டியில் வரும் புகார்கள் பற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் தெரிவிக்கும் மாணவ, மாணவிகளின் பெயரை ரகசியமாக வைக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.கவுன்சிலிங்
அதேபோல் மாறி வரும் சமுதாய சூழல் காரணமாக மாணவர்கள் இளம் வயதிலேயே மது, புகைப்பிடித்தல், புகையிலை மற்றும் போதை பாக்குகளை உட்கொள்ளுதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகி விடுகின்றனர். இதுபோன்ற தீய பழக்கங்கள் இருக்கும் மாணவர்கள், படிப்பில் நாட்டமில்லாமல் சோர்வாக காணப்படுவார்கள்.இதனால் மாணவ பருவத்தில் படிப்பும், அதன்பின்னர் வாழ்க்கையும் பாதிக்கப்படும். எனவே, மாணவர்களின் நடவடிக்கைகளை ஆசிரியர்கள் உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். மாணவர்கள் தீய பழக்கங்களுக்கு அடிமையாகி இருப்பது தெரியவந்தால், உடனடியாக அவர்களுக்கு கவுன்சிலிங் வழங்க வேண்டும், என்றும் கலெக்டர் ஹரிகரன் அறிவுறுத்தி உள்ளார்.

No comments:

Post a Comment