மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் தனி செயலாளர் பொன்ராஜ் விடுத்துள்ள செய்தியில் கூறி இருப்பதாவது:–டாக்டர் அப்துல்கலாம் இந்த உலகத்தில் 2.5 கோடி மாணவர்களை, இளைஞர்களை நேரில் சந்தித்து லட்சிய விதையை விதைத்த ஒரே ஒரு ஆசிரியர்.மாணவர்கள், இளைஞர்களோடு கலந்துரையாடி, அவர்களது கேள்விக்கு பதில் சொல்லி, அவர்களிடம், ‘‘உறக்கத்தில் வருவதல்ல கனவு உன்னை உறங்கவிடாமல் செய்வது தான் கனவு’’ என்ற தாரக மந்திரத்தை விதைத்தவர்.டாக்டர் அப்துல்கலாம் இந்த மண்ணில் விதைக்கப்பட்டு 40 நாட்கள் முடிந்து 41–வது நாளன்று செப்டம்பர் 5–ந்தேதி ஆசிரியர் தினம் வருகிறது.எனவே இந்த வருடம் ஆசிரியர் தினத்தன்று, அதாவது செப்டம்பர் 5–ந்தேதி அன்று டாக்டர் அப்துல்கலாமை மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் டாக்டர் அப்துல்கலாம் கொடுத்த உறுதிமொழிகளை இன்றுமுதல் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிப்பேன் என்று உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.இந்த நிகழ்ச்சியை தங்கள் பள்ளியிலோ, கல்லூரியிலோ, அல்லது தாங்கள் பணிபுரியும் நிறுவனத்திலோ, அல்லது தாங்கள் வசிக்கும் பகுதியிலோ, தெருவிலோ கூடி ஒன்றாக சேர்ந்தும் எடுக்கலாம். அப்படி செய்ய இயலாதவர்கள் தங்களது வீட்டில் ஒன்றாக இணைந்து அந்த உறுதிமொழிகளை எடுக்கலாம்.டாக்டர் அப்துல்கலாமின் உறுதிமொழிகளை எடுத்து அதில் கையொப்பம் இட்டு, அதை தங்களது வீட்டில் தினமும் பார்த்து, படித்து அதன்படி நடந்து தாங்களது லட்சிய கனவை நனவாக்கி, வாழ்வில் முன்னேறி அப்துல்கலாம் கண்ட லட்சிய நாயகன், நாயகியாக நீங்கள் இந்த இந்தியாவை, தமிழகத்தை வளமான நாடாக்க உழைப்பேன் என்று உறுதி எடுத்தீர்கள் என்றால், அது நீங்கள் மானசீக குருவாக ஏற்றுக்கொண்ட டாக்டர் அப்துல்கலாமின் கனவை நனவாக்க, நீங்கள் எடுக்கும் லட்சிய உறுதிமொழியாக அது மாறும்.டாக்டர் அப்துல்கலாமின் உறுதிமொழிகளை www.abdulkalam.com என்ற இணைய தளத்தில் இருந்து நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உங்களை பதிவு செய்து, அந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களை இணைய தளத்தில் நீங்கள் பதிவேற்றம் செய்யலாம்.இந்த அழைப்பை டாக்டர் அப்துல்கலாமின் குடும்பத்தார்களும், அவரோடு பணிபுரிந்த நண்பர்கள் சார்பாகவும் விடுக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Saturday, August 29, 2015
New
ஆசிரியர் தினத்தன்று அப்துல்கலாம் லட்சியத்தை நிறைவேற்ற உறுதிமொழி: மாணவர்களுக்கு அழைப்பு
About KALVI
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Newer Article
12th Std Quarterly Exam Time table2015 &10th Quarterly exam x std time table 2015:
Older Article
ஆசிரியப் பயிற்றுனர்கள் அதிவிரைவில் பட்டதாரி ஆசிரியர்களாக பணிமாறுதலக்கான செயல்முறைகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment