உலகில் அதிக செலாகும் நகரம் எது தெரியுமா? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

உலகில் அதிக செலாகும் நகரம் எது தெரியுமா?

உலகில் அதிக செலாகும் நகரம் எது தெரியுமா? நியூயார்க்கோ லண்டனோ அல்ல. அங்கோலா நாட்டில் உள்ள லுவாண்டா தான் அந்த நகரம். சமீபத்தில் இது குறித்து ஆய்வு செய்த இசிஏ இன்டர்நேஷனல் என்ற அமைப்பு இத்தகவலை வௌியிட்டுள்ளது.

ஆப்ரிக்காவில் ஜாம்பியா, போட்ஸ்வானா அருகே அட்லாண்டிக் கடல் ஓரத்தில் அமைந்துள்ள நாடு அங்கோலா. ஒரு காலத்தில் போர்ச்சுக்கிசீயர்கள் ஆதிகத்தில் இருந்தது. அவர்கள் உருவாக்கியது தான் லுவாண்டா நகரம். அங்கோலாவில் ஏராளமான பெட்ரோல் கண்டுபிடிக்கப்பட்டதும், லுவாண்டா பெரு வளர்ச்சி அடைந்தது. அங்கு வசிப்போரின் செலவினங்களும் கூடின.

அதிக செலவு:

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, உலகிலேயே அதிக செலவாகும் நகரமாக லுவாண்டா தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு ஒரு பெட்ரூம் கொண்ட வீட்டின் ஒரு மாத வாடகை குறைந்தபட்சம் 2 லட்சத்து 27 ஆயிரத்து 500 ரூபாய் ஆகிறது. ஒரு ஜோடி சாதாரண ஜீன்ஸ் பேன்ட் வாங்க வேண்டுமானால் 15 ஆயிரத்து 600 ரூபாய் கொடுக்க வேண்டும். இதற்கே இவ்வளவு என்றால் மற்ற விஷயங்களுக்கு எவ்வளவு செலவாகும் என பார்த்துக்கொள்ளுங்கள்.

மற்ற நகரங்கள்: இப்பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற நகரங்கள்

1. லுவாண்டா (அங்கோலா)

2. ஹாங்காங் (சீனா)

3.ஜூரிச் (சுவிட்சர்லாந்து)

4.சிங்கப்பூர்

5.ஜெனீவா (சுவிட்சர்லாந்து)

6.ஷாங்கை (சீனா)

7.பெய்ஜிங் (சீனா)

8.சியோல் (தென் கொரியா)

9.பெர்ன் (சுவிட்சர்லாந்து)

10.என்ஜமீனா (சாட்)

உலகின் பணக்கார நாடு என கூறப்படும் அமெரிக்காவின் ஒரு நகரம் கூட இப்பட்டியலில் இடம்பெறவில்லை என்பது இன்னொரு ஆச்சரியம்.

No comments:

Post a Comment