அடிப்படைச் செயல்களை ஆர்வத்துடன் கற்க அருமையான software. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, August 29, 2015

அடிப்படைச் செயல்களை ஆர்வத்துடன் கற்க அருமையான software.

மாணவர்களின் கணித அறிவை வளர்க்க அடிப்படைச்செயல்கள் (கூட்டல், கழித்தல், பெருக்கல் மற்றும் வகுத்தல் ) மிக அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. அவ்வாறு மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை ஆர்வத்துடன் கற்க Math Educator என்கிற software உதவி செய்கிறது.
எங்கள் பள்ளியில் (ஊ.ஒ.நடுநிலைப்பள்ளி – பொன்பத்தி. செஞ்சி ஒன்றியம். விழுப்புரம் மாவட்டம். ) மாணவர்களுக்கு அடிப்படை செயல்களை திறமையாக செய்ய பல்வேறு வழிமுறைகளை கையாண்டு வருகிறோம். அவற்றில் ஒன்றுதான் இந்த Math Educator.
இவற்றைப் பயன்படுத்தி கணினியின் மூலம் மாணவர்கள் கற்றலில் ஈடுபடுகின்றனர். வாரத்தில் ஒருநாள் (வெள்ளிக்கிழமை) இதற்காக பயன்படுத்துகிறோம். இதைப் பயன்படுத்தி கற்றலில் ஈடுபடும் போது மாணவர்கள் ஆர்வத்துடனும், மகிழ்ச்சியாகவும் கற்கின்றனர். இதன் பிறகு தன்னம்பிக்கையுடன் கணித வகுப்பில் செயல்படுகின்றனர்.
பயன்படுத்தும் முறை:
இதில் Addition(கூட்டல்), Subtraction(கழித்தல்), Multiplication(பெருக்கல்), Division(வகுத்தல்) என நான்கு பிரிவுகள் உள்ளது.இதில் ஒவ்வொரு பிரிவிலும் Level 1, Level 2, Level 3 என மூன்று உட்பிரிவுகள் உள்ளது. ஒவ்வொரு Level –லிலும் 10 கேள்விகள் கேட்கப்படுகிறது. ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு option கொடுக்கப்படுகிறது. சரியான விடையை Click செய்தவுடன் சரியாக இருந்தால் Correct என்றும்,
தவறாக இருந்தால் Wrong என்றும் பதிலளிக்கும். 10 வினாக்களுக்கு விடையளித்தப்பின் எத்தனை மதிப்பெண்கள் பெற்றனர் என்ற விவரம் கொடுக்கிறது. இதனால் அவர்களின் திறமையை அவர்களே கண்டறிந்து செயல்படுகின்றனர். நீங்களும் இந்த software – ரை Download செய்து தங்கள் பள்ளி மாணவர்களுக்கு பயன்படுத்தியப் பின் தங்களின் மேலான கருத்துக்களைப் பகிருமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். இந்த Software – யை Download செய்ய கீழே உள்ள Link – கை கிளிக் செய்யவும்.

Maths link Click Here

No comments:

Post a Comment