இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!'( நாம் பாடு பட்ட சேர்த்த CPS பணம் என்னவாகும்??? இதுதான் பங்குச்சந்தையில் உள்ள ஆபத்து) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, August 25, 2015

இந்திய பங்கு சந்தை முதலீட்டாளர்களுக்கு ரூ.7 லட்சம் கோடி'அவுட்!'( நாம் பாடு பட்ட சேர்த்த CPS பணம் என்னவாகும்??? இதுதான் பங்குச்சந்தையில் உள்ள ஆபத்து)

சீனாவின் பொருளாதார மந்தநிலை, அமெரிக்காவில் வட்டி உயரும் சூழல் போன்ற காரணங்களால், நேற்று, இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச் சந்தைகள், வரலாறு காணாத சரிவைச் சந்தித்தன.பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களின் பங்குகள் விலை
சரிவடைந்ததால், முதலீட்டாளர்களுக்கு, 7 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக, மதிப்பிடப்பட்டுள்ளது.

நேற்று, மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'சென்செக்ஸ்', வர்த்தகத்தின் இடையே 1,741.35 புள்ளிகளை இழந்தது. இது, கடந்த ஏழு ஆண்டுகளில் ஏற்பட்ட, மூன்றாவது மிகப் பெரிய சரிவு. இதற்கு முன், 2008, ஜன., 22ம் தேதி, பங்கு வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ், 2,272.93 புள்ளிகளும்; 21ம் தேதி வர்த்தகத்தின் இடையே 2,062.20 புள்ளிகளும் குறைந்திருந்தன. தேசிய பங்குச் சந்தையின், 'நிப்டி' குறியீட்டு எண், வர்த்தகத்தின் இடையே 530.55 புள்ளிகள் வரை சரிவடைந்தது. எனினும், பங்கு வர்த்தகத்தின் இறுதியில், லேசான முன்னேற்றம் ஏற்பட்டதால், சென்செக்ஸ், 1,624.51 புள்ளிகள் குறைந்து, 26,741.56 ஆகவும்; நிப்டி, 490.95 புள்ளிகள் சரிவடைந்து, 7,809 என்ற அளவிலும் நிலைபெற்றன.

நேற்று, ஒரே நாளில், மும்பை பங்குச் சந்தையின் மதிப்பு, 100 லட்சம் கோடிக்கும் கீழாகக் குறைந்து, 95,33,105 கோடி ரூபாயாக வீழ்ச்சி கண்டது. பங்குச் சந்தை பட்டியலில், முதல், 10 இடங்களில் உள்ள, டி.சி.எஸ்., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட, 10 நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 2 லட்சம் கோடி ரூபாய் வரை குறைந்தது.

இந்த வீழ்ச்சிக்கு, சீன பொருளாதாரத்தின் சரிவு தான் காரணம். இது குறித்து, தனியார் நிறுவனம் ஒன்று, ரகசியமாக ஆய்வு நடத்தியது. அதில், சீனாவின் பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையில் உள்ளதும், அதன் தொழில் துறை உற்பத்தி, இதுவரை இல்லாத வகையில் மிகவும் சரிவடைந்துள்ள விவரமும் தெரிய வந்தது. இந்த ஆய்வறிக்கை, கடந்த, வெள்ளியன்று வெளியானது. இதனால், அச்சமடைந்த சீன பங்கு முதலீட்டாளர்கள், சனி, ஞாயிறு விடுமுறைக்குப் பின், நேற்று பங்குச் சந்தை செயல்படத் துவங்கியதும், மளமளவென பங்குகளை விற்று விட்டு வெளியேறினர். இதனால், சீனாவின் ஷாங்காய் பங்குச் சந்தையின், எஸ்.சி.ஐ., குறியீட்டு எண், கடந்த, எட்டு ஆண்டுகளில் இல்லாத அவிற்கு, 9 சதவீதம் வரை சரிவடைந்தது.அதே சமயம், இந்த சரிவை தடுத்து நிறுத்த, கடந்த காலத்தில் எடுத்தது போன்ற எந்த நடவடிக்கையையும், சீன அரசு எடுக்கவில்லை. ஏனெனில், அண்மையில் தான், தன் நாட்டின் கரன்சியான, 'யுவான்' மதிப்பை சீனா குறைத்திருந்தது. அதனால், செயற்கையான பணப்புழக்கம் மூலம் சந்தையை தாங்கிப் பிடித்தால், அது, பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்ற அச்சம் காரணமாக, சீன அரசு, நேற்றைய வீழ்ச்சியை வேடிக்கை பார்த்தது.இதன் எதிரொலியாகத் தான், ஆசிய, ஐரோப்பிய நாடுகளின் பங்குச் சந்தைகளும் சரிவடைந்தன. இந்த சரிவிற்கு, மற்றொரு காரணமும் உள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற, அமெரிக்க மத்திய வங்கியின் நிதி ஆய்வுக் கூட்டத்தில், வட்டி விகிதங்களை உயர்த்த ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதனால், 14 ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்க வங்கிகளின் வட்டி விகிதம் உயரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்து, அங்கு முதலீடு செய்யும் நோக்கில், அன்னிய நிதி நிறுவனங்கள், மும்பை பங்குச் சந்தையில், அதிக அளவில் பங்குகளை விற்பனை செய்தன.கடந்த, 2013 துவக்கத்தில், சென்செக்ஸ், 17,903 புள்ளிகளாக இருந்தது.அதே ஆண்டு செப்டம்பரில், ரிசர்வ் வங்கி கவர்னராக ரகுராம் ராஜன் பொறுப்பேற்றதும், 2014ல், மோடி தலைமையில், மத்திய அரசு அமைந்ததும், பங்குச் சந்தைக்கு வலு சேர்த்தது. இதையடுத்து, ஒரே ஆண்டில், சென்செக்ஸ், 60 சதவீதம் வரை உயர்ந்து, 30 ஆயிரம் புள்ளிகளை எட்டியது.

சீன பங்குச் சந்தைக்கு அடுத்தபடியாக, இந்திய பங்குச் சந்தை முதலீடு, 31 சதவீதத்திற்கும் அதிகமான வருவாயை ஈட்டித் தந்தது. இந்நிலையில் தான் நேற்று, மும்பை பங்குச் சந்தை கடும் சரிவை சந்தித்தது.

இழப்பு எப்படி?

ஒரு நிறுவனப் பங்கை, 100 ரூபாய்க்கு வாங்கி, அதன் விலை 80 ரூபாயாகக் குறையும் போது, 20 ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. அந்த பங்கை விற்றால் தான், இழப்பு ஏற்படுமே தவிர, அதை நீண்ட கால முதலீடாக வைத்திருந்தால், அது, இழப்பு கணக்கில் சேராது.சுருக்கமாகக் கூறினால், பங்கை வாங்கி, விற்கும் வர்த்தகர்கள் மட்டுமே இழப்பை சந்திப்பர். முதலீடு அடிப்படையில், இதை உடனடி இழப்பாகக் கருத முடியாது.

கச்சா எண்ணெய்:

நேற்று, சர்வதேச முன்பேரச் சந்தையில், ஒரு பீப்பாய் 'பிரென்ட்' கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தின் இடையே, 44.24 டாலராக வீழ்ச்சி கண்டது. இது, கடந்த, ஆறரை ஆண்டுகளில் காணப்படாத சரிவு. இதற்கு முன், 2009ம் ஆண்டு மார்ச் மாதம், இந்த நிலை காணப்பட்டது. அமெரிக்காவின், டபிள்யு.டி.ஐ., கச்சா எண்ணெய் விலை, வர்த்தகத்தின் இடையே, 39 டாலராக சரிவடைந்தது.கச்சா எண்ணெய் விலை சரிவால் கிடைக்கும் பயனை முழுமையாகப் பெற முடியாதவ

No comments:

Post a Comment