கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன?: நீண்டகால மர்மம் விலகியது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, August 30, 2015

கொட்டாவி வருவதற்கான காரணம் என்ன?: நீண்டகால மர்மம் விலகியது

நம்மோடு பேசிக் கொண்டிருப்பவர்கள் அறுத்துத் தள்ளும்போதோ, நமக்கு சுவாரஸ்யமில்லாத வேலையில் தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் வேளையிலோ, நம்மையும் அறியாமால் வாயை மெதுவாக அதே சமயம் வெகு பெரிதாக ‘ஹோவ்’ என்ற ஓசையுடன் கொட்டாவி விடுகிறோம்.

இந்த செயலுக்கான பின்னணி என்ன? என வெகு ஆண்டுகளாக ஆய்வு செய்துவந்த உடல்கூறியல் வல்லுனர்கள், தற்போது அதற்கான காரணத்தை கண்டறிந்துள்ளனர்.

உறக்கத்திற்கான தேவை மற்றும் அசதி அதிகமாகும் வேளையில் இதைப்போல் அடிக்கடி வரும் கொட்டாவியானது, சூடாகிப்போன நமது மூளையை குளிர்விக்கும் ஒரு காரணியாக திகழ்வதாக இந்த ஆய்வை மேற்கொண்ட டாக்டர் நிக் நைட் என்பவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும், நமது நுரையீரலில் தேங்கிப்போன அளவுக்கதிகமான கரியமில வாயு (கார்பன் டைஆக்சைடு) கொட்டாவிகளின் மூலம் வெளியேற்றப்பட்டு, புதிய பிராணவாயுவை (ஆக்சிஜன்) நுரையீரல் உள்வாங்கிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ள அவர், ஒவ்வொரு கொட்டாவிக்குப் பின்னரும் நமது விழிப்புணர்வு சார்ந்த சுறுசுறுப்பு அதிகரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment