எம்.பி.பி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு: 148 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 28, 2015

எம்.பி.பி.எஸ். மூன்றாம் கட்டக் கலந்தாய்வு: 148 மாணவர்களுக்கு சேர்க்கை கடிதம்

எம்.பி. பி.எஸ்., பி.டி.எஸ் படிப்புகளில் மாணவர்களைச் சேர்க்க ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 3-ஆம் கட்டக் கலந்தாய்வில், 148 மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது.
அரசு எம்.பி.பி.எஸ்.-அரசு பி.டி.எஸ். காலியிடம் இல்லை: சென்னை ஓமந்தூரார் அரசு பலநோக்கு சிறப்பு மருத்துவமனை அரங்கில் மூன்றாம் கட்ட கலந்தாய்வு நடைபெற்றது.
இரண்டாம் நாளான ஞாயிற்றுக்கிழமை பங்கேற்க 2,379 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில் 583 பேர் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்த எம்.பி.பி.எஸ்.-மறு ஒதுக்கீட்டு இடங்கள் 20, சென்னை கே.கே. நகர் இ.எஸ்.ஐ. மருத்துவக் கல்லூரியில் இருந்த 12 காலியிடங்கள், சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் இருந்த 33 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் என அனைத்தும் நிரப்பப்பட்டு விட்டன.
111 சுயநிதி அரசு பி.டி.எஸ். காலியிடங்கள்: சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளின் 118 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்களில் மாணவர்கள் சேர சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது. முடிவில் சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளில் 111 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் மட்டுமே காலியாக உள்ளன.
23 கூடுதல் அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்: 69 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக பாதிக்கப்பட்ட 27 முற்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களில், 23 பேருக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள் 3-ஆம் கட்டக் கலந்தாய்வில் ஏற்படுத்தப்பட்டு சேர்க்கைக் கடிதம் வழங்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
செப்டம்பர் 30-க்குள்: சேர்க்கைக் கடிதம் பெற்ற மாணவர்கள் உரிய கல்லூரிகளில் வரும் 30-ஆம் தேதிக்குள் சேர வேண்டும் என்றும் அவர்கள் கூறினர்.
4-ஆம் கட்டக் கலந்தாய்வு எப்போது? அகில இந்திய ஒதுக்கீட்டிலிருந்து சமர்ப்பிக்கப்படும் எம்.பி.பி.எஸ். இடங்கள், மீதம் உள்ள 111 அரசு ஒதுக்கீட்டு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றை நிரப்ப 4-ஆம் கட்டக் கலந்தாய்வு நடத்துவது குறித்து உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment