நெஞ்சம் நிமிர்ந்து, தேசத்திற்காக சேவை புரிய ஓர் வாய்ப்பு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 28, 2015

நெஞ்சம் நிமிர்ந்து, தேசத்திற்காக சேவை புரிய ஓர் வாய்ப்பு!

அத்தகைய அர்ப்பணிப்பு உணர்வுடன் நாட்டின் பாதுகாப்பிற்காக சேவை புரிய, இளைஞர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு இதோ:

பணியிடங்கள்: இந்திய கடற்படையில் பைலட் (ஆண்கள் மட்டும்) மற்றும் அப்சர்வர் (இரு பாலரும்)

வயது வரம்பு: பொது விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 24 வயதுக்குள் இருத்தல் வேண்டும். கமர்ஷியல் பைலட் லைசென்ஸ் வைத்திருக்கும் விண்ணப்பதாரர்கள் 19 வயது முதல் 25 வயதுக்குள் இருத்தல் வேண்டும்.

யார் விண்ணப்பிக்கலாம்?: திருமணமாகாத ஆண் மற்றும் பெண் இன்ஜினியரிங் பட்டதாரிகள். முழு உடற்தகுதியுடன், கண் பார்வை குறைபாடின்றி இருத்தல் மிகவும் அவசியம்.

கல்வித் தகுதி: வரும்  ஜூன் 2016 ஆம் ஆண்டு தொடங்க உள்ள  பைலட் / அப்சர்வர்  பயிற்சிகளுக்கு விண்ணப்பிக்க, மேல்நிலை வகுப்புகளில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களை முதன்மை பாடமாக பயின்று பி.இ., / பி.டெக்., படிப்புகளில் குறைந்தது 60 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தால் பைலட் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். அப்சர்வர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்ஜினியரிங் பட்டப் படிப்பில் 55 சதவீதம் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.

தேர்வு முறை: இரண்டு கட்டமாக நடைபெறும் தேர்வில், இளநிலை பட்டப்படிப்பில் எடுத்த மதிப்பெண்கள் மற்றும் செயல்திறன் தகுதிகள் அடிப்படையில், சர்வீஸ் செலக்சன் வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

ஒரு நாள் நடைபெறும் முதலாம் தேர்வு நிலையில், நுண்ணறிவு சோதனை, படம் புலனுணர்வுத் திறன், மற்றும் குழு விவாதம் போன்றவைகள் மதிப்பிடப்படும். நான்கு நாட்கள் நடைபெறும் இரண்டாம் தேர்வு நிலையில், உளவியல் சோதனை, குழு பணி தேர்வு (குரூப் டாஸ்க் டெஸ்ட்) மற்றும் நேர்காணல் தேர்வு ஆகியவை மதிப்பிடப்படும்.

தொடர்ச்சியாக, பைலட் ஆப்டிடியூட் பேட்டரி டெஸ்ட் மற்றும் ஏவியேஷன் மருத்துவ தேர்வும் நடத்தப்படும். பைலட் மற்றும் அப்சர்வர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் எழிமலாவில் (கேரளா)  உள்ள நேவல் அகடெமியில் 22 வாரங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுவர். அதன்பின் சப்-லெப்டினென்ட் பதவியில் தேவைப்படும் இடங்களில் பணி அமர்த்தப்படுவர்; ஆண்டுக்கு ரூ.10.50 லட்சம் ஊதியமாக வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பிய விண்ணப்பங்களை ‘பிரின்ட்’ எடுத்து உரிய ஆவணங்களுடன் தபால் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 2

மேலும் விவரங்களுக்கு: www.joinindiannavy.gov.in

No comments:

Post a Comment