செப்டம்பர் 30 (நிகழ்வுகள்) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, September 29, 2015

செப்டம்பர் 30 (நிகழ்வுகள்)

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்

1995 - தமிழகத்தின் திருச்சி மாவட்டத்திலிருந்து பிரித்து கரூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது.

2003 - தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது.

செப்டம்பர் கடைசி வாரம்

உலக கடல்வாழ் பாதுகாப்பு தினம்

(World Maritime Day)

கடலின் சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக ஐ.நா. அமைப்பானது சர்வதேச கடல்வாழ் பாதுகாப்பு அமைப்பை உருவாக்கியுள்ளது. இந்த அமைப்பானது செப்டம்பர் கடைசி வாரத்தில் ஏதோ ஒரு நாளை உலக கடல்வாழ் பாதுகாப்பு தினமாக கொண்டாடுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கடல் மாசு அடையாமல் பாதுகாப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.

செப்டம்பர் கடைசி ஞாயிறு

உலக இதய தினம்

(World Heart Day)

புகையிலைப் பழக்கம், உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள், கொழுப்பு போன்றவை இதய நோயை ஏற்படுத்துகின்றன. சரியான உணவுப் பழக்கம் இல்லாததாலும் இதயக் கோளாறு ஏற்படுகின்றது. உலக இதய அமைப்பு, உலக சுகாதார அமைப்பு, யுனெஸ்கோ மற்றும் ஐக்கிய நாட்டின் விளையாட்டு மற்றும் முன்னேற்ற அமைப்பு ஒன்றிணைந்து உலக இதய தினத்தை 2000ஆம் ஆண்டில் முதன்முதலாக கொண்டாடியது.

காது கேளாதோர் தினம்

(World Deaf Day)

சிலர் பிறவியிலோ அல்லது விபத்தின் மூலமோ காது கேளாதோர் ஆகின்றனர். காது கேட்கும் திறனை இழந்து விட்டால் வாழ்வு முடிந்துவிட்டதாக அர்த்தம் அல்ல. இவர்களின் தொடர்புக்கு சைகை மொழி கைகொடுக்கிறது. இவர்களையும் சக மனிதர்களாக அங்கீகரித்து அவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த செப்டம்பர் மாதம் இறுதி ஞாயிற்றுக்கிழமை இத்தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment