கல்வித்துறையில் பாரபட்ச நடவடிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, September 26, 2015

கல்வித்துறையில் பாரபட்ச நடவடிக்கை

க்க கல்வித்துறையில் பாரபட்சமான நடவடிக்கைகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரிடம் மனு அளித்தனர்.

இதில் கூறியிருப்பதாவது: தொடக்க கல்வித்துறையில் ஒரு தலை பட்சம், பாரபட்சமான நடவடிக்கை போன்றவற்றை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தொடக்க கல்வித்துறையில் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் போன்றோரின் நிர்வாக ரீதியான பணிகள் என்ன என்பதை உதவித் தொடக்க கல்வி அலுவலர்கள் பார்வையின் போது தெளிவுப்படுத்திட வேண்டும்.

தேசிய திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற, 2013-14, 2014-15ம் கல்வி ஆண்டில் எட்டாம் வகுப்பு மாணவர்களின் மாதந்தோறும், 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை இன்று வரை அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. உடனடியாக அதை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்தனர்.

No comments:

Post a Comment