சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைப்பு? மத்திய நிதி அமைச்சகம் தகவல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 30, 2015

சிறுசேமிப்பு வட்டி விகிதம் குறைப்பு? மத்திய நிதி அமைச்சகம் தகவல்

மத்திய அரசின் பி.பி.எப். என்னும் பொது வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட அஞ்சலக சேமிப்பு திட்டங்களுக்கு 8.7 சதவிகிதம் முதல் 9.3 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. மத்திய அரசு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு இப்படி அதிகபட்ச வட்டி வழங்குவதால், போட்டியிட முடியவில்லை என்பதால் அவற்றுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்று வங்கிகள் வலியுறுத்தி வருகின்றன.

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகத்தின்கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் கூறுகையில், “சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு மாற்றி அமைக்கும். அதே நேரத்தில் சிறுசேமிப்பாளர்களின் நலன்களும் கவனத்தில் கொள்ளப்படும்” என குறிப்பிட்டார்.

எனவே சிறுசேமிப்புகளுக்கான வட்டி விகிதம் குறைக்கப்படும். அதே நேரத்தில் சிறுசேமிப்பு திட்டங்களின் அனைத்து அம்சங்களும் ஆராயப்படும் எனவும் அவர் கூறினார்.

சிறுசேமிப்பு திட்டங்களில் எம்.ஐ.எஸ். என்னும் அஞ்சலக மாதாந்திர வருவாய் திட்டம், அஞ்சலக நேர வைப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம், அஞ்சலக சேமிப்பு திட்டம், பெண் குழந்தைகள் சேமிப்பு நிதி திட்டம் ஆகியவையும் அடங்கும்.

No comments:

Post a Comment