விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு மையங்கள் புதிதாக அமைக்க கருத்துரு அனுப்பி வைக்க உத்தரவு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, September 28, 2015

விருதுநகர் மாவட்டத்தில் பிளஸ்2 தேர்வு மையங்கள் புதிதாக அமைக்க கருத்துரு அனுப்பி வைக்க உத்தரவு

அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் பிளஸ்2 தேர்வு மையஙகள் புதிதாக அமைப்பது தொடர்பாக அனைத்து விவரங்களுடன் கருத்துருவை அனுப்பி வைக்க தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவி இன்று அனுப்பியுள்ள சுற்றரிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

பிளஸ்2 தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளின் நன்மை கருதியும், எண்ணிக்கைகேற்பவும் ஆண்டுதோறும் தேர்வு மையங்கள் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டில் இத்தேர்வு மையங்கள் அமைப்பதற்கு குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றி கருத்துரு அனுப்பி வைக்க வேண்டும்.

அவ்வகையில் நகர்ப்புறத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில் எண்ணிக்கை மாணவர்கள்-200 பேரும், மாணவிகள்-150 பேரும், இருபாலர் பள்ளியில் 200 பேரும் என்ற எண்ணிக்கையில் இருக்க வேண்டும். அதேபோல், கிராமப்புற பகுதியில் உள்ள ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில்-125 பேரும், மாணவிகள் பள்ளியில் 100 பேரும், இருபாலர் பள்ளியில் 100 பேரும் இருக்க வேண்டும். மலைப்பகுதி மேல்நிலைப்பள்ளியில் ஆண்கள்-100 பேரும், பெண்கள் பள்ளியில்-75 பேரும், இருபாலர் பள்ளியில்-100 பேரும் இருக்க வேண்டும்.

இப்போதுள்ள தேர்வு மையங்களில் 600 பேர்களுக்கு மேல் இருந்தால், அதை  குறைத்து பள்ளிகளை பிரித்து புதிய தேர்வு மையமும், 10 கி.மீட்டருக்கு மேல் இருந்தால் புதிய தேர்வு மையமும் அமைக்கலாம். அதில், தேர்வு மையம் அமைய இருக்கும் பள்ளியில் 500 பேர்கள் தேர்வு எழுதும் வகையில் ஒரு அறைக்கு 20 பேர் வீதம், 25 அறைகளும், போதுமான இருக்கை வசிதிகளும் இருக்க வேண்டும்.

10-ம் வகுப்பு வரையில் சி.பி.எஸ்.சி வழியிலும், 11,12-வது மாநில பாடத்திட்டம் இருக்கும் பள்ளிக்கும், முதல் முதலாக தேர்வு எழுதும் பள்ளி போன்றவைகளுக்கு தேர்வு மையம் கிடையாது. இதுபோன்ற நிபந்தனைகளை பின்பற்றி, நேரில் கள ஆய்வு செய்து மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் தேர்வு அறைகள் தொடர்பான முழுவிவரங்களுடன் கருத்துருவை தயார் செய்து அக்டோபர் முதல் வாரத்திற்குள் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment