டி.என்.பி.எஸ்.சி.,நிரந்தரப் பதிவு எண் கட்டாயம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, September 30, 2015

டி.என்.பி.எஸ்.சி.,நிரந்தரப் பதிவு எண் கட்டாயம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இணைய வழி விண்ணப்பத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இதுவரை விருப்பத்தினடிப்படையிலிருந்த நிரந்தரப்பதிவு முறை கட்டாயமக்கப்பட்டுள்ளது.

தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் நிரந்தரப் பதிவு (One Time Registration) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதுவரை நிரந்தரப் பதிவு செய்யாத விண்ணப்பதாரர்கள் கண்டிப்பாக நிரந்தரப் பதிவு செய்து கொண்டு அதன் விளைவாக கிடைக்கப்படும் பயனாளர் குறியீடு (Login id) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை பயன்படுத்தி விண்ணப்பதாரர்கள் தங்களது விவரப் பக்கத்தினை (Dashboard) ஏற்படுத்திக் கொள்ளலாம். அவர்களது விவரப் பக்கத்தில் உள்ள விவரங்களை தேவைபடும் போது மாற்றிக்கொள்ளலாம், கூடுதல் விவரங்களை பதிவு செய்துகொள்ளலாம்.

இப்புதிய முறையின்  பயன்கள்:
புதிதாக நிரந்தரப் பதிவில் பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள், தங்களது பயனாளர் குறியீடு (Login id) மற்றும் கடவுச்சொல் (Password) ஆகியவற்றை விண்ணப்பதாரர்களே உண்டாக்கிக்கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்கும் ஒவ்வொரு தேர்வுக்கான விண்ணப்பத்தின் விவரங்களையும் தன் விவரப் பக்கத்தில் (Dashboard) பார்த்துக் கொள்ளலாம்.
அத்தேர்வுக்கென விண்ணப்பதாரர்கள் செலுத்திய கட்டண விவரங்களையும் தன் விவரப் பக்கத்தில் (Dashboard) பார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து இதுவரை சலுகை பெற்ற விவரம் அறிந்துகொள்ள இயலுமாகையால், தேர்வுக் கட்டணம் செலுத்துவது குறித்த சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்படும்.
விண்ணப்பதாரர்களின் ஆளறித்தன்மைக்காக (Identity) ஒவ்வொரு விண்ணப்பதாரரும் தங்களின் பள்ளி இறுதிச் சான்றிதழின் (SSLC Certificate) பதிவெண் (Register Number) தேர்ச்சி பெற்ற மாதம் மற்றும் வருடம் ஆகியவற்றை கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும். ஒன்றுக்கும் மேற்பட்ட SSLC சான்றிதழ்கள் வைத்துள்ள விண்ணப்பதாரர்கள் அவர்கள் இறுதியாக தேர்வெழுதி தகுதி பெற்ற மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேற்படி விவரங்கள் தவறாக இருக்கும் பட்சத்தில் விண்ணப்பதாரர்கள் மீது தேர்வாணையம் கடுமையான நடவடிக்க மேற்கொள்ளும்.
இனிவருங்காலங்களில் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தங்களது கடவுச்சொல்லை மறந்துவிட்டால் இனி அவர்கள் தேர்வாணைய அலுவலகத்தை தொடர்பு கொள்ளத் தேவையில்லை. அவர்களே தங்களது கடவுச்சொல்லை மீட்டமைத்துக் கொள்ளலாம்.
விண்ணப்பதாரர்கள் அவர்களது சான்றிதழ்களை தேர்வாணைய இணைய தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு உரிய நேரத்தில், அதாவது, விண்ணப்பிக்கும் போதோ அல்லது தேர்வுக்குப் பின்னரோ, வழிவகை செய்யப்படும். விண்ணப்பங்கள் இணைய வழி மூலம் பெறப்படும் சான்றிதழ்களின் நகல்களைக் கொண்டு சரிபார்க்கப்படுவதால், விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்குத் தேவைப்படும் அனைத்து சான்றிதழ்களையும் சரியான அளவில் தெளிவாக இருக்குமாறு ஸ்கேன் செய்து தேர்வாணையத்தால் கேட்கப்படும்போது
பதிவேற்றம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இதனால், விண்ணப்பதாரர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேரில் அழைக்கப்படுவது தவிர்க்கப்படும். இருப்பினும் பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்களில் ஏதேனும் சந்தேகம் ஏற்படும்பட்சத்தில், அந்த விண்ணப்பதாரர்கள் மட்டும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு நேரில் அழைக்கப்படுவர்.
பதிவேற்றம் செய்யப்படும் சான்றிதழ்கள் தெளிவில்லாமல் இருந்தாலோ அல்லது பதிவேற்றம் செய்யப்படும் இணைப்புக்கு தொடர்பில்லாததாக இருந்தாலோ விண்ணப்பதாரர்களின் விண்ணப்பம் எவ்வித அறிவிப்புமின்றி நிராகரிக்கப்படும்.
நிரந்தரப்பதிவு மற்றும் இணையவழி விண்ணப்பம் ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்த விவரங்கள் www.tnpsc.gov.in, www.tnpscexams.net மற்றும் www.tnpscexams.in ஆகிய வலைப்பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள், தங்களது விண்ணப்பத்தில் மிகச் சரியான தகவல்களை மட்டுமே பதிவு செய்து தேர்வாணையம் தேர்வு முடிவுகளை விரைந்து முடித்திட உதவுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை 1800 425 1002 என்ற கட்டணமில்லா தொலை பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.  

No comments:

Post a Comment