இந்தியாவின் மாசு வெளிபாடு 10 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 24, 2016

இந்தியாவின் மாசு வெளிபாடு 10 ஆண்டுகளில் 40 சதவீதம் அதிகரிப்பு

ஐ.நா. சபையில் இந்தியா சமர்பித்துள்ள அறிக்கையில் 10 ஆண்டுகளில் மாசு வெளிபாடு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவநிலை மாற்றத்தை காண்காணிக்கும் ஐ.நா. அமைப்பின் அறிவுறுத்தல்படி வளரும் நாடுகள் ஒவ்வொரு இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை பருவநிலை மாற்றத்திற்கு முக்கிய காரணமாக விளங்கும் மாசு வெளிபாடு பற்றி ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்.

இந்த திட்டத்தின் படி இந்தியாவின் மாசு வெளிபாடு பற்றி சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்றம் அமைச்சகம் அறிக்கை தயாரித்து ஐ.நா. சபையிடம் சமர்பித்துள்ளது.

இந்த அறிகையில் 2000 முதல் 2010 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 2.13 பில்லியன் டன் மாசுப்பட்ட வாயுகள் வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது 2000-ம் ஆண்டை ஒப்பிடும் போது 40 சதவீதம் அதிகம் ஆகும்.

மாசு வெளிபாட்டில், மின் உற்பத்தி மற்றும் போக்குவரத்து துறைகள் 72 சதவீதமும், விவசாயம் 18 சதவீதமும், தொழில்துறைகள் 8 சதவீதமும், கழிவுகள் சம்பந்தப்பட்ட துறைகள் 3 சதவீதமும் பங்களித்துள்ளன. 

No comments:

Post a Comment