வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? - 1950-க்கு எஸ்எம்எஸ் அனுப்பி விவரம் பெறலாம்: திருத்தங்கள் செய்ய நாளை சிறப்பு முகாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, January 30, 2016

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? - 1950-க்கு எஸ்எம்எஸ் அனுப்பி விவரம் பெறலாம்: திருத்தங்கள் செய்ய நாளை சிறப்பு முகாம்

திருவள்ளூர் மாவட்டத்தில் வாக் காளர்கள் ’1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றுள்ளதா? உள்ளிட்ட விவரங்களை அறிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்காளர்கள் தங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை எளிதாக அறிந்துக்கொள்ள வசதியாக, இந்திய தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக தேர்தல் ஆணையமும் இணைந்து புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி வாக்காளர்கள் ’1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு, தங்களது செல்போன் மூலம் தனது வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பினால், ’வாக்காளரின் பெயர் மற்றும் முகவரி, வாக்காளர் பட்டியலின் பாகம் எண் ஆகிய விவரங்கள் எஸ்எம்எஸ்ஸில் வரும்.

இந்த வசதியினை அனைத்து வாக்காளர்கள் மற்றும் மாற்று திறனாளி வாக்காளர்கள் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும், வாக்காளர்கள் தங்கள் அலைபேசி மூலம், ’1950’ என்ற தொலைபேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பி விவரங்களை பெறும் பட்சத்தில் வாக்காளரின் கைபேசி எண்ணும் வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படும்.

அதுமட்டுமல்லாமல், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய மற்றும் திருத்தம் உள்ளிட்டவை செய்ய விரும்புபவர்கள் வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பள்ளிகளில் நாளை (31-ம் தேதி) மற்றும் பிப்ரவரி 6-ம் தேதிகளில் நடக்கும் சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் உள்ளிட்டவைகளுக்கு, WWW.ELECTIONS.TN.GOV.IN என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். மாவட்டத்தின் 12 வட்டாட்சியர் அலுவலகங்களில் இயங்கி வரும் 54 சேவை மையங்கள் மற்றும் புதுவாழ்வு திட்டத்தின் கீழ் செயல்படும் 203 சேவை மையங்கள், 128 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சேவை மையங்கள் மூலமும் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல் உள்ளிவைகளை மேற்கொள்ளலாம்.

இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment