குடியரசு தினத்தன்று வண்டலூர் பூங்கா செயல்படும் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 24, 2016

குடியரசு தினத்தன்று வண்டலூர் பூங்கா செயல்படும்

குடியரசு தினத்தை முன்னிட்டு, வரும் ஜனவரி 26-ஆம் தேதி வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா நிர்வாகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை அன்று பராமரிப்புப் பணிகளுக்காக பூங்கா விடுமுறை தினமாகும். எனினும் குடியரசு தின அரசு விடுமுறையை முன்னிட்டு, ஜனவரி 26-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, கிண்டி சிறுவர் பூங்கா ஆகியவை வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment