மாணவர் சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு: உயர்கல்வியில் தமிழகம் முதலிடம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 24, 2016

மாணவர் சேர்க்கை 44.8 சதவீதமாக உயர்வு: உயர்கல்வியில் தமிழகம் முதலிடம்

உயர் கல்வியில் இந்தியாவிலே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக பேரவையில் முதல்வர் ஜெய லலிதா பெருமிதத்துடன் தெரி வித்தார்.

பேரவையில் நேற்று ஆளு நரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் பேசியதாவது:

வடகிழக்கு பருவமழையின் போது கடந்த நூறாண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பொழிந்ததால் பாதிப்புகள் அதிக மாக இருந்தன. பல்வேறு துறை களைச் சேர்ந்த 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்பு, நிவாரணப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட் டோருக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுகிறது. குடிசை வீடு களில் வசித்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரில் இதுவரை 2,313 பேருக்கு குடியிருப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சிறு வணிகர்கள், பெட்டிக் கடை நடத்துவோருக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.5 ஆயிரம் வட்டி இல்லா கடன் வழங்கப்படுகிறது. இதன்மூலம் 2 லட்சம் சிறு வணிகர்கள் பயன்பெறுவர். மேலும், 25 சதவீத மூலதன மானியத்துடன் ரூ.5 லட்சம் வரையிலான கடன், தகுதியுள்ள வேலையற்ற பட்டதாரிகள் அனை வருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதனால் மழை பாதிப்பில் இருந்து அனைவரும் மீண்டுவிடுவர் என உறுதியாக நம்புகிறேன்.

வளர்ச்சி என்பதை வெறும் பொருளாதார வளர்ச்சியாக நான் பார்ப்பதில்லை. மக்கள் பொருளாதார வளர்ச்சியின் பயனைப் பெற வேண்டுமானால் அவர்கள் கல்வியிலும், உடல் நலத்திலும் சிறந்து விளங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.84,568 கோடி ஒதுக்கப்பட்டது. இது, கடந்த திமுக ஆட்சியில் ஒதுக்கியதைக் காட்டிலும் 116 சதவீதம் அதிகம். அதனால்தான் தொடக்கக் கல்வி, நடுநிலைக் கல்வி, இடைநிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி என அனைத்து நிலைகளிலும் சேர்க்கை விகிதம் கணிசமாக உயர்ந்துள்ளது. இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் புதிதாக 221 தொடக்கப் பள்ளி கள் தொடங்கப்பட்டுள்ளன. பள்ளிகளில் ரூ.4,166 கோடியில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத் தப்பட்டுள்ளன. 72,843 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 14,711 ஆசிரியர் அல்லா பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

உயர்கல்வியைப் பொறுத்த வரை, தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்பதை பெருமையுடன் பதிவு செய்ய விரும்புகிறேன். 2011-ம் ஆண்டு உயர்கல்வியில் மொத்த மாணவர் சேர்க்கை 18 சதவீதம். அப்போது இந்திய அள வில் 15 சதவீதமாக இருந்தது. தற் போது இந்திய மொத்த மாணவர் சேர்க்கை 23.6 சதவீதம். ஆனால், தமிழகத்தில் இது 44.8 சதவீதத்தை அடைந்து, தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்குகிறது.

நாட்டிலே முதன்முறையாக, மாநிலத்தில் சுகாதாரத் துறைக் கென தனியாக மருத்துவப் பணிகள் தேர்வு வாரியம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் 14,707 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் ஆயிரம் குழந்தை பிறப்புகளுக்கு 24 என இருந்த குழந்தை இறப்பு விகிதம், தற்போது 21 ஆக குறைந்துள்ளது. இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

No comments:

Post a Comment