மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, January 28, 2016

மார்ச் மாதத்திற்குள் பள்ளி மாணவர்களுக்கு ஆதார் எண் : கல்வி இயக்குனரகம் முடிவு!

நாடு முழுவதும் சிறுவர் முதல் பெரியோர்
வரை அனைவருக்கும் ஆதார் எண்
கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆதார்
புகைப்படம் எடுப்பதற்காக சிறப்பு மையங்கள்
திறக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் 2016 மே
இறுதிக்குள் அனைவருக்கும ஆதார் எண்
கொடுக்கும் பணி முடிக்க வேண்டும் என்று
மாநில அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.
ஆனால் சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில்
1.20 கோடி பேர் இன்னும் ஆதார் எண்ணுக்கு
பதிவு செய்யவில்லை என்றும், இதில் 60
சதவீதம் மாணவர்கள் உள்ளதாக தெரியவந்தது.
மாநிலம் முழுவதும் ஆரம்பம், நடுநிலை
மற்றும் உயர்நிலை பள்ளியில் படிக்கும்
மாணவ, மாணவிகளுக்கு ஆதார் எண்
கொடுப்பதற்காக சிறப்பு முகாம் நடத்த
முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களை அலையவிடாமல்
தவிர்க்கும் வகையில் அந்தந்த பள்ளிகளுக்கு
நேரில் சென்று புகைப்படம் எடுக்கும் திட்டம்
செயல்படுத்த கர்நாடக மாநில
பொதுகல்விதுறை இயக்குனரக ஆணையர்
கே.எஸ்.சத்யமூர்த்தி முடிவு செய்தார்.
இதுதொடர்பாக உயரதிகாரிகளுடன்
ஆலோசனை நடத்தினார். அதில் பள்ளிகளுக்கு
நேரில் சென்று ஆதார் புகைப்படம் எடுக்கும்
திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் வரும் மார்ச் 31ம் தேதிக்குள் மாநிலம்
முழுவதும் படிக்கும் மாணவ, மாணவிகளை
ஆதார் எண் கொடுக்க தீர்மானிக்கப்பட்டது

No comments:

Post a Comment