கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, January 31, 2016

கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல்25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது.

பதினைந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும், நேற்று மறியலில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய முறையை அமல்படுத்த வேண்டும்; ஆசிரியர்கள் இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்; ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த வேண்டும்; ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உட்பட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆசிரியர் கூட்டுக் குழுவான, 'ஜாக்டோ' பல போராட்டங்களை நடத்தியது.அதன்பிறகும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜன., 30 முதல் பிப்., 1 வரை, மூன்று நாட்கள், தொடர் மறியல் நடத்தப் போவதாக அறிவித்தது. அதன்படி, நேற்று, அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும், 'ஜாக்டோ' அமைப்பு சார்பில் மறியல் நடந்தது. இப்போராட்டத்தில் ஈடுபட்ட, 12 ஆயிரம் ஆசிரியைகள் உட்பட, 25 ஆயிரம் பேரை, போலீசார் கைது செய்தனர். நேற்று நடந்தது போல், இன்றும், நாளையும் மறியல் போராட்டம் நடத்த, ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். நாளை, ஆசிரியர்கள் வகுப்புகளை புறக்கணித்து, மறியலில் ஈடுபட உள்ளதால், அரசு பள்ளிகளில் வகுப்புகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ஆசிரியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது, அரசுக்கு சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment